பக்கம்:விடிவெள்ளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஐ விடி வெள்ளி பூட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவார்கள். இல்ல்ை யெனில், கதவைத் திறந்து உள்ளே பார்க்க ஆசைப்படு வார்கள். அவர்களுக்கு நாம் ஏன் அந்த ஆசையையும் அiண் வேலையும் கொடுக்க வேண்டும்? என்று சொல்வி அவள் மெதுவாகச் சிரித்துக் கொண்டாள். அவனிட மிருந்து மறுமொழி எதையும் எதிர்பாராமலே அவள் கதவை அடைத்து வெளியே பூட்டிக் கொண்டாள். அவள் வந்த ஓசை அவன் காதில் விழாதது போலவே, அவள் அங்கிருந்து எப்படி நகர்ந்தாள்-எந்தப் பக்கம் போனாள்-என்று புலப்படுத்தும் சத்தமும் கேட்கவில்லை. அவனை நம்பலாம் என்று தோன்றியது. ஒரு சமயம். அவனை நம்பலாமா' என்ற சந்தேகமும் எழுந்தது அவ லுக்கு, தன்னை அறைக்குள் போட்டுப் பூட்டி விட்டுச் சென்றவள் காவல்காரர்களை அழைத்து வந்து காட்டிக் கொடுத்து விட்டாலோ? அவன் மனம் அரித்தது சரி. சசி வருவது வரட்டும். என்ன வந்தாலும் ஏற்றுக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டியதுதான்' என்று தீர்மானித்தான் அவன், வீதியில் சடபட"லென ஒலித்தது குதிரைகளின் குளம்பெகி லி. தான் பத்திரமாக இருப்பதை எண்ணி மகிழ்வுற்றான் அவன். என்னைக் காட்டிக் கொடுக்க விரும்பியிருந்தால் அவள் இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்க வேண்டாமே? அங்கேயே நிற்க வைத்திருந்: தாலே போதும் என்று நினைத்தான். இவன் தமிழ் மகளாகத் தான் தோன்றுகிறது. விஷ்ணு சிம்மனின் மாளிகையைச் சேர்ந்தவளாகவே இருக்கலாம். இருந் தாலும் இருட்டிலே அவள் என்னை எப்படிக் கண்டு பிடிக்க முடிந்ததோ தெரியவில்லை என்று குழம்பியது அவன் உள்ளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/21&oldid=906053" இலிருந்து மீள்விக்கப்பட்டது