பக்கம்:விடிவெள்ளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 27 'இதேபோல் இன்னும் ஒருவரும் என்னிடம் சொன் னார். உங்கனைச் சந்திப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் தான் சொன்னார்.’ "வியப்புக்குரியதுதான் அப்படிச் சொன்னது யார்? "அவர் யார் என்று எனக்குத் தெரியாது. தமது பெயர் மங்கையர்க்கரசி என்றார்......' 'மங்கையர்க்கரசியா? புலவரின் குரலில் வியப்பு தோனித்தது. ஆமாம். விஷ்ணு சிம்மன் வீட்டில்......" அவர் பரபரப்படைந்தார் அவளை நீ எங்கே கண் டாய் என்ன நடந்தது? ஒன்று விடாது கூறு' என்றார். இளம்வழுதி தனக்கு எதிர்ப்பட்ட அனுபவத்தைச் சொன்னான். மங்கையர்க்கரசி செய்த உதவியற்றிக் கூறி விட்டு, அவனது நற்பண்பைப் பாராட்டிப் பேசினான். பங்கையர்க்கரசியை எனக்குத் தெரியும். அவள் எதிர்ப்பார்த்திருந்த புலவன் நான் தான் அவளுக்குத் தமிழ் மீது அளவில்லாத அன்பும், பக்தியும் உண்டு தனது தமிழ் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அவள் என்னிடம் பயிற்சி பெற்று வருகிறான்......' "மன்னிக்க வேண்டும் என்று குறுக்கிட்டான் இனம் விஷயம் புரியாதவராய் அவர் அவனைப் பார்த்தார். இனாலேதானே இன்றிரவு நீங்கள் அந்த அன்னை யாருக்குத் தமிழ் கற்பிக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக வருந்துகிறேன். இதனாலேயே மன்னிப்புக் கோரினேன் . அது கிடக்கட்டும். உனது செயல் சிறுபிள்ளைத் தனமானது என்று சொன்னேனே ஏன் தெரியுமா? நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/28&oldid=906066" இலிருந்து மீள்விக்கப்பட்டது