பக்கம்:விடிவெள்ளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் E 85 மீண்டும் தங்களை எப்பொழுது காணலாம்? என்று. அவர் கேட்ட போதுதான் அவர் சரியாகவ: பதில் சொன் னார்: நம்மைக் கூட்டுவித்த திருவருள் மீண்டும் கூட்டும் என் து சான்னாரே... இனம்வழுதியின் சிந்தனை வேகமாக ஒ.ஒட, அவன் கால்களும் வேகமாக நடந்தன மாமூலனார் பாண்டியர் களைப் பற்றி உணர்ச்சியோடு பேசியவற்றை எல்லாம் அவன் மறக்கவே முடியாது. அவன் அன்னை அன்னம் கூட அடிக்கடி சொல்லியிருக்கிறாள். பாண்டியரின் பெருமை பற்றிப் பேசுவதற்கு அலுப்படையாதவள் அவன். குலப்பெருமை, குடிப்பெருமை தரக்கூய பூரிப்போடு அ:ெள் பேசுவாள். ...பாண்டியரின் சிறப்பு பலவகை யிலும் தனித்தன்மை பெற்றது. ஆதியில் பெண்ணரசு இத்தாட்டில் மட்டுமே இருந்தது என்று சொல்லலாம். பண்டோ என்ற இனத்தைச் சேர்ந்த மின்னன் ஒருவன் தனது ஒரே மகளுக்கு அரசுரிமை அளித்தான். அவன் அன்புடன் அளித்த பெரிய நாட்டில் 368 ஊர்கள் இருந் தன. ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக் குத் திரை கொண்டுவந்த தத்தனர். அவள் வழி.வந்தவர் களே பாண்டியர் அவர்கள் பெருஞ் சேனைகளே. இ, சீருஞ் சிறப்புமாக ஆட்சி புரிந்தவர்கள். ஆனால் காலம் சதி செய்துவிட்டது. காப்பிரர் எதும் கடுவிஷம் நாட்டிலே புகுந்து அனைத்தையும் கெடுத்து விட்டது...' இதை அடிக்கடி கூறுவாள் அன்னம். ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் தான் அறிந்ததை தன் மகனுக்குச் சொல்லுவாள். பாண்டிய மரபில் வந்தவர்கள் காலப் போக்கில் மதுக்குடியிலும், சுகவாழ்விலும் உள்ளம் பறிகொடுத்து, அறம் மறந்து உளம் குறுகி, சிதைந்த வாழ்வு வாழ்த்துவிட்டார்கள். சீரழிந்து போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/36&oldid=906083" இலிருந்து மீள்விக்கப்பட்டது