பக்கம்:விடிவெள்ளி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 87 யில்லை. அடடா, இவர்கள் வருவதை நான் பார்க்கவே யில்லையே! என்று அதிர்ந்தது அவன் உள்ளம் சிலபேர் தூக்கத்திலேயே நடப்பார்களாமே? அத்த ரகமோ என்னவோ!' என்று இழுத்தது ஒரு தேன் குரல். அப்படி இரா:தடி கவியாக இருக்கலாம். கற்பனை உலகிலேயே சஞ்சரிக்கும் குணம் கவிஞருக்கு உண்டு அல்லவா?’ என்று குமுறியது ஒரு குயில் குரல். இனி கனவு கண்டு. அந்தக் கனவைத் தேடி அலை யும் பித்தனாக இருக்கும் எனக் கூறியது ஒரு கிளி மொழி. இல்லை இல்லை. பெரிய குறிக்கோள் வீரர் திட்ட மிட்டபடி கோட்டையைப் பிடிக்கச் செல்லும் சூரர். நடையைப் பார்த்தாலே தெரியவில்லை' என்று வினத் தனம் செய்தது ஒரு வீணைக்குரல். வேதாந்தியாக இருக்கும் மண், பெண், டொன், இருள், ஒளி எல்லாம் ஒன்றே என்று எண்ணுவதால் கதிரே வருவோர் மீது மோது நினைப்பும் இருக்கும்" 荡 கு تيغ % نقلم أمة ، تيتي என்று அகவியது மயில் குரல் ஒன்று. "ஐயோ பாவம்' என முனங்கியது பேதைக்குரல் ‘ஓகோ க தலோ அதுதான் இரக்கம் பிறந்து விட்டது!’ என்றாள் மயில் குரல் அங்கே வெடித்தது கலீன் சிரிப்பொலி, இளம்வழுதியின் காதுகளில் எல்லாம நன்கு விழுந் தன தன்னைப் பற்றிய வம்புகள்தான் அவை என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது - வைகறை புலர்ந்து விட்டது. கீழ்வானம் ஒணிக்கண் திறந்தது. பறவைகள் சிரித்தன. புஷ்பங்கள் மலர்ந்தன. உலகெலாம், உலகின் பொருள் எல்லாம், தத்தம் உண்ம்ை விடி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/38&oldid=906087" இலிருந்து மீள்விக்கப்பட்டது