பக்கம்:விடிவெள்ளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 41 'குறும்பைப்பாரேன். இப்போ அதை எப்படி எடுக் கிறதாம்? என்றது கிளிமொழி. இதெல்லாம் என்னம்மா விளையாட்டு?’ என் து அலுத்துக்கொண்டது தேன் குரல். "அவள் பிடித்துக்கொள்வா ள் என்று நினைத்தேன், இப்படி ஆகுமின்னு கண்டேனா?' என்றது மயில் குரல், விளையாட்டைப் பாரு உன் குடத்தைப் பிடுங்கி நடு ஆற்றிலே வீசி எறிந்தால் உனக்கு எப்படியிருக்கும்: என்று வெடுவெடுத்தது வீணைக்குரல். 'ஐய்யப்யோ...குடம் ஒடுதே, நான் என்ன செய் வேன்' என்று அங்கலாய்த்தாள் அமுதவல்லி- வேய்ங் குழலோசையின் சொந்தக்காசி. அந்தக் குரல், கரையோடு நடந்த இளம்வழுதியை உலுக்கியது. அதில் தொனித்த வேதனை அவன் இத யத்தைத் தாக்கியது. செயல்திறம் இழந்து நின்ற அழகி யின் தோற்றம் அவன் பார்வையில் படடு உள்ளத்தை என்னவோ செய்தது. மேலும் எவ்வுணர்வுக்கும் அவன் வேலை கொடுக்கக் காத்திருக்கவில்லை. திடுமென நீரில் குதித்தான் அவன். அவன் கைகள் மின்னல் வேகம் பெற்றன. அவன் உடல் வேகசக்தி பெற்றிருந்தது. ஆற்றுநீர் விளையாட்டுக் களமாயிற்று. அவன் பிடிக்குள் சிக்க மல் ஓட முயலும் குழந்தைபோல்வேகமாக நழுவப்பார்த்ததுகுடம், மேலும் ஒரு கை வீச்சு. உடலின் முற்பாய்ச்சல், குடம் சிக்கிக் கொண்டது ‘பிடித்து விட்டாசடி!'-பல குரல்கள் எக்களிப் போடு இசைத்தன. பல கரங்கள் வளைகள் குலுங்கக் கொட்டின. வெற்றி வீரனை ஆர்வத்தோடு நோக்கும் அன்புப் பார்வையோடு விழிகள் துடித்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/42&oldid=906097" இலிருந்து மீள்விக்கப்பட்டது