பக்கம்:விடிவெள்ளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விடிவெள்ளி இளம்வழுதி தரையில் நடப்பதுபோன்ற இயல்பான தன்மையோடு ஆற்றின் ஒட்டத்தை எதிர்த்து நீந்தி வந் தான் கரையருகே வந்து "இதோ குடம்' என்று உயாத தினான். திற்கரங்கள் பல வேகமாக நீண்டன. ஒன்று உரிமையோடு பற்றிக்கொண்டது நகை பூத்த மலர் முகங்கள் பல இனிமையான அவன் முகத்தை நோக்கின. ஒரே ஒரு முகம் செந்தாமரையாக மாறி அதிக அழகு பெற்றது. . விழிகள் பல அவன் விழிகளில் சேரத் துடித்தன. ஒரு ஜோடி விழிகள் மட்டும் அவன் விழிகளை ஆசை தேக்க ல் தொட் ன; தாழ்த்தன. ஆகா! அமுதமா இவள் பெயர்: அற்புத அழகிக்கு ஏற்ற அருமையான பெயர்!’ என்று புளகித்தது. அவன் உள்ள ம் இளம்வழுதி கரையேறினான். முன்பு வம்பு பேசிய மங்கையர் அவனை இன்னுமா இனம் கண்டு கொள்ளவில்லை? எனினும், அவர் கவிது குமுத வாய்கள் சொற்கள் உதிர்க்க மறுத்தன. பொழுது வேறு ஒளிச்சாட்டை கொண்டு துரத்திவந்தது. அவர்கள் 'நல்ல பிள்னை'களாக நடந்தார்கள். அமுதவல்லி மட்டும் தன் நன்றியை உணர்ச்சிப்பார்வையில் சேர்த்துத் தந்தான்; இதழ்களின் சிறுமுறுவலில் தீட்டிக்காட்டினாள். தோழியரோடு நடந்தாள்; போனாள். அவர்கள் போகும் திக்கில் அவள் போவதையே பார்த்தபடி நின் தான் இளம்வழுதி பனிதன் விந்தையான படைப்பு மனித உணர்ச்சிகள் விசித்திரமானவை. அவற்றை எப்பொழுதும் அடக்கி வெற்றி பெறுவது என்பது சாத்தியமல்ல என்ற பேச் செ லி மிதந்துவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/43&oldid=906098" இலிருந்து மீள்விக்கப்பட்டது