பக்கம்:விடிவெள்ளி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. ர விடிவெள்ளி போக்கர்களும், ஆற்றுக்குச் சென்று வருகிற சிலரும். காத்து நின்றாலும் பரவாயில்லை; ஆச்சி மலர்ந்த முகத் தோடு தருகின்ற பிட்டை வாங்கிச் சாப்பிடாமல் அங் கிருத்து செல்வதில்லை என்று உறுதி பூண்டவர்களாய் காட்சி தருவதும் அன்றாட நிகழ்ச்சிதான் பிழைப்புத் தேடி மதுரைக்கு வந்து சேர்ந்த மீனாட்சி ஆச்சி அவனது சொத்த ஊரான பூங்குடியை மறந்தாலும் மறந்திருக்கலாம். ஆனாலும் எல்லோரும் அவளைப் பூங்குடி ஆச்சி என்றே அழைத்து வந்தனர். அனைவ ருக்கும் அவளிடம் அன்புதான். அவளும் எல்லோருட லும் சிரித்துச் சிரித்துப் பேசுவதும், பரிவுடன் உபசரிப்ப தும், பெண்களின் குறைகூறல்களைப் பொறுமையோடு கேட்பதும், பலருக்கும் ஆலோசனைகள் கூறுவதுமாகக் காலம் கழித்து வந்தாள். அவ்வைக் கிழவி மாதிரி வசித்த அவளுக்கு ஊர் முழுவதும் உறவுதான். அதனால் அவள் வியாபாரமும் நன்கு நடைபெற்றது. அவள் உள்ளத்தில் மகிழ்வு பொங்கி வழியவும் வசதி ஏற்பட்டது. ஆச்சி' ஆச்சி என்றும் அம்மா, அம்மா என்றும் அவளை ஆசையோடு அழைக்கும் "அன்புக் குழந்தைகள் முகத் தைப் பார்ப்பதிலும், பேச்சைக் கேட்பதிலும் அவள் வாழ்வின் பயனை அனுபவிப்பதாகத் தோன்றியது. வைகைக் கரையிலிருந்து திரும்பிய இளம்வழுதி, - ஆச்சி வியாபாரம் செய்வதையே கவனித்துக் கொண்டிருந் தான். மருத மரத்தின் அருகிலேயே மீனாட்சி ஆட்சியின் குடிசை இருந்தது. ஊருக்குப் புதிதாக வந்து, தங்கி யிருக்க இடமின்றித் தவிப்பவர்களுக்கு அவ்வப்போது - அவள் இடம் அளித்து உதவுவது வழக்கம். இளம்வழுதி யும் அங்குதான் தங்கியிருந்தான். அவன் பூங்குடி ஆச்சிக்கு முன்னரே அறிமுகமானவன் என்பது அவள் அவனிடம் இயல்பாகப் பேசிப் பழகிய முறையிலிருந்தே விளங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/45&oldid=906101" இலிருந்து மீள்விக்கப்பட்டது