பக்கம்:விடிவெள்ளி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விடிவெள்ளி வண்டியின் ஒருபுறத்துத் திரை சற்றே விலகியது. பூத்திரையின் பின்னே பெளர்ணமி நிலவு போல் அழகு முகமும் அருள் தவழும் விழிகளும் தோன்றின. அம் முகத்தைக் கண்டதும் இளம்வழுதி திடுக்கிட்டான். அமைதி தேங்கி நின்ற அவ்விழிகள் ஒரு கணம் அவன் முகத்தைத் தொட்டன; அவன் கண்களின் பார்வையை ஏற்றன. எனினும், அக்கரிய விழிகளில் எவ்விதமான நிழ்லும் படியவில்லை. அவனை அதற்குமுன் கண்டிருந்த தாகவோ, இப்போது அவனை இந்த இடத்தில் கண்ட தால் திகைப்படைந்ததாகவோ காட்டும் சலனம் எதுவும் அக் கண்களில் நிழலாடவில்லை. து அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. வேதனையைத் துரண் டியது. இந்த அம்மையார் என்னை எப்படி மறந்து விட முடியும்? என்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள இவர்களுக்கு விருப்பமில்லை போலும் இவர்களை இவ் வேளையில் இந்த இடத்தில் நான் காண முடிந்ததை இவர்கள் விரும்பவில்லை போலும்!” என்று அவன் உள்ளம் முனங்கியது. இங்கு மனிதர்களின் போக்கே மர்மம் நிறைந்ததாகத் தோன்றுகிறது. இரவு முழுவதும் உணர்ச்சித் துடிப் போடு உரையாடிக் கொண்டிருந்த மாமூலனார் விடியற் காலையில் இனம் தெரியாதவர் போல் போகிறார். இர் விலே என்னைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்து உதவி புரிந்த இந்த அம்மையார் இப்போது என்னைத் தெரியாதவர் போல் நடிக்கிறார்களே, வியப்பு தான் என்று எண்ணினான் அவன். மங்கையர்க்கரசிதான் அவ்வண்டியில் வந்திருந்தாள். அவள் வழுதியைக் கவனிக்காமவில்லை. எனினும் அவனை அறியாதவள் போலவே அவள் நடந்து கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/47&oldid=906107" இலிருந்து மீள்விக்கப்பட்டது