பக்கம்:விடிவெள்ளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 அவள் முகம் தெரிந்த உடனேயே, மீனாட்சி ஆச்சி பரபரப்புட ன் எழுந்து வண்டி அருகில் சென்றாள். வண்டி பில் இருந்தவள் கேட்டவற்றுக்கு ஏதோ பதில் சொன் னால், திரும்பி வந்து தனது அலுவலில் ஈடுபட்டாள். வண்டியும் அங்கிருந்து நகர்ந்தது. நேரே ஒடியது. அதன்.திரைகள் அப்புறம் விலகவும் இல்லை; அழகு முகம் வெளியே எட்டிப் பார்க்கவுமில்லை. அவளைப் பற்றி ஆச்சியிடம் விசாரிக்க வேண்டும் என்ற துடிப்பு இளம் வழுதிக்கு உண் டாயிற்று. ஆச்சி உரிய முறையில் பதிலளிப்பாளோ அல்லது மறுத்து விடு வாளோ என்ற தயக்கமும் உடன் எழுந்தது. முடிவில் இயல்பான ஆர்வமே வெற்றி பெற்றது. 'இப்போ வண்டியிலே வந்தது யாரு ஆச்சி என்று கேட்டான் அவன். 'யாரோ பெரிய இடத்து அம்மாள் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். பூங்குடியிலிருந்து ஒரு ஆளு வருவ தாகச் சொல்லியிருந்து தாம் இங்கே வந்து தங்கியிருக்குதா என்று கேட்பதற்காக வண்டியை நிறுத்தினாங்க என்று ஆச்சி தெரிவித்தாள். அவள் தனக்குத் தெரிந்த உண்மை முழுமையும் கூறி விட்டாளா, இன்னும் அதிகமான விவரங்கள் அவளுக்குத் தெரியுமா தெரியாதா என்று நிச்சயிக்க முடியவில்லை அவனால். - அதைப் பற்றி இளம்வழுதி அதிகமாக மைைசக் குழப்பிக் கொள்ளவுமில்லை. அவனுக்கு வேறு வேலைகள் இருந்தன. முக்கியமாக வரகுணத்தேவரை அவன் சந்தித் தாக வேண்டும் அவரைக் கண்டு பேசிய பிறகுதான் இதர திட்டங்களைப்பற்றி அவன் யோசிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/48&oldid=906109" இலிருந்து மீள்விக்கப்பட்டது