பக்கம்:விடிவெள்ளி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 49 அச்சம் எழுப்பக்கூடியவை, அவரைக் காண நேரிடுகின்ற எவரும் அவரிடம் பயமும் மதிப்பும் கொள்வது இயல்பு. அவரது மிடுக்கான குரலும், அவ்வப்போது அவர்சிதறுகிற அட்-காசச் சிரிப்பும் அவருடைய உடலுறுதியையும் உள்ளத்து வலிமையையும் விளம்பரப்படுத்தும், தேவர் இளம்வழுதியை உவகை பூத்த முகத்தோடு தான் வரவேற்றார். அவர் உள்ளத்தில் கரந்துறையும் இருள் நினைப்பை அவன் எவ்வாறு உணரமுடியும்: - இளம்வழுதியைப் பற்றியும், அவன் அன்னையைப் பற்றியும் செவ்விருக்கை நாட்டினரைப்பற்றியும் அவர் பரிவுடன் விசாரித்தார். களக்குடி நாடு, தென் கல்லக நாடு, செவ்விருக்கை நாடு, களாந்திருக்கை நாடு, அன நாடு முதலிய இடங்களில் மக்கள் விழிப்புற்று, உணர்ச்சி பெற்றுத் துடிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்..." என்றார் தேவர். - ஆம்ாம். பஞ்சமும் பகைவர் பயமும், ஆள்வோரின் கொடுமையும் மக்களை மிகுந்த தொல்லைக்குள்ளாக்கி விட்டன நாட்டினர் எவ்வளவு காலம்தான் ஒடுங்கிக் கிடப்பர்? இப்பிரர்கள் கன்னெஞ்சக் கயவர்களாய்...... இளம்வழுதி உணர்வுச் சூட்டோடு பேசத் தலைப்பட் டான் தேவர் அவன் பேச்சுக்குத் தடை விதித்தார் 'நீ செல்வது உண்மைதான். இருத்தாலும் என்ன செய்ய முடியும்? கால நிலைமை அப்படி இருக்கிறது......... நாட்டு மக்கள் வீறுகொண்டு எழத்துடிக்கிறார்கள் அவர்கனை ஒன்று கூட்டி......" வரகுணர் மீண்டும் குறுக்கிட்டார். நாட்டு மக்கள் எப்பவும் ஆட்டுமத்தைக் கூட்டம்தான். வல்லான் வ்குத்த வழியிலே கண்மூடித்தனமாகச் செல்லும் அறிவும் ஆற்ற அம்தான் அவர்களுக்கு உண்டு......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/50&oldid=906116" இலிருந்து மீள்விக்கப்பட்டது