பக்கம்:விடிவெள்ளி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 55 'பூங்குடியார் ஒருவர். இங்கே தங்க இடம் கிடைக் குமா? வேறு யார் யார் தங்கியிருக்கிறார்கள் என்றெல் லாம் விசாரித்தார். நானே உம்மைப் பற்றிச் சென் னேன்...இப்பதான் அவர் சாப்பிடுகி ,ார். பேரப்பிள்ளை சாப்பிட வேண்டாமா?’ என்றாள் ஆச்சி 'எனக்கு இப்போ பசி இல்லை’ என்று மறுத்தான் அவன். எனினும் ஆச்சியின் பிடிவாதத்தின் முன்னால் அவனுடைய மறுப்புரைகள் வெற்றி பெறவில்லை. . 'பூங்குடியார்' என்று ஆச்சி அறிமுகப்படுத்தி ஆணை இளம்வழுதி கூர்ந்து கவனித்தான் அவனும் இவனை ஆராய்வதுபோல் பார்த்தான். அவனாகவே புன்னகை புரிந்து பேசத் தொடங்கினான். 'நீங்கள் செவ்விருக்கை நாட்டிலிருந்து வந்திருக்கிறீர் களாக்கும்? நான் பூங்குடி சாத்தன் கணபதி என்றான் அவன் "அப்படியா? மகிழ்ச்சி' என்று பதிலளித்த இளம் வழுதி, என் பெயரையும் ஆச்சி உங்களுக்குச் சொல்லி யிருப்பான் என்று நினைக்கிறேன்' என்ற ன். மற்றவன் தலை அசைத்தான். நீங்கள் சீக்கிரம் திரும்பி வந்து விடுவீர்கள் என்று ஆச்சி சொன்னாள். ஆனால் நீங்கள் வருவது சந்தேகம் என்றே நான் நினைத் தேன்' என்றான். - ஏனோ' 'நீங்கல் வரகுணத் தேவரைக் கண்டு பேசுவதற்காக அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தீர்கள் இலலையா? அது அபாயகரமான பொறி. உங்களை அது வெளியே விடாது என்று நான் அஞ்சினேன்' என்றான் புதியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/56&oldid=906127" இலிருந்து மீள்விக்கப்பட்டது