பக்கம்:விடிவெள்ளி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57 "அது உங்களுக்கே புரிந்துவிடும்...சிறு பின்னைத் தனம் நிறைந்த பாண்டிய மரபினன் பூங்குடி ஆச்சி வீ. டில் தங்கியிருக்கிறான். அவன் திரும்பவும் அங்கு வந்து சேர்ந்தால் அவனைக் கவனித்து உதவிசெய். இது உன் பொதுப்பு' என்று பிராட்டியார் எனக்குக் கட்டளை யிட்டிருக்கிறார்கள்...' "ஆ, மங்கையர்...' என்று வாய் திறந்த இளம்வழுதி யின் உதடுகளுக்குப் பூட்டுப் போட்டான் சாத்தன், விரல் களால் சாடை காட்டி. தெரிந்தவை தெரிந்த்வரோடு இருப்பதே நல்லது. அனைத்தையும் வெளிப்படையாகக் கூறவேண்டிய தே ைதான் என்ன?’ என்றான். "நான் தேவரைக் காணச் சென்றது அவர்களுக்குத் தெரியாதே? உங்கள் எண்ணம் அது. அவர்கள் எவ்வளவோ விஷயம் அறிந்து வைத்திருப்பதாக எனக்குத் தோன்று கிறது. இரவில் யார் மீதோ ஈட்டி எறிந்த கயலனை தன்னால் பிடித்துத் தரமுடியும் என்று வரகுண த் தேவர் பெரிய இடத்தில் பெருமை பேசியதையும், காவல் வீரர் கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக் குத் திரும்பியதையும் அவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது நான் பிராட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தேன். நீ பூங்குடி ஆச்சி வீட்டுக்கு வந்து விட்டுத்தானே என்னைக் காண வந்திருக்கிறாய், அங்கு இருந்த யாரையாவது கண்டாயா? என்று என்னிடம் கேட்டார்கள் நான் காணவில்லை என்றேன். உடனே தான் அவர்கள் என்னிடம் விளக்கமாகக் கூறினார்கள்’ என்று சாத்தன் கணபதி சொன்னான் - இளம்வழுதியின் உள்ளம் மங்கையர்க்கரசிக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தது. அந்த அம்மையார் தன்னை மறக்கவோ, புறக்கணிக்கவோ விரும்பவில்லை; அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/58&oldid=906131" இலிருந்து மீள்விக்கப்பட்டது