பக்கம்:விடிவெள்ளி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த8 விடிவெள்ளி மாறாகத் தனக்கு மேலும் உதவி புரிவதில் கருத்து உடை யவராக இருக்கிறார் என்பதை அறியவும் அவனுக்கு மிகுந்த மகிழ்வு உண்டாயிற்று. ஆன் வரகுண த்தேவரைக் கண்டு உரையா டியதையும் அவர் அவசரமாக பிரிந்து சென்றதையும்: தேவரின் மகள் தனக்கு உதவி புரிந்ததையும் அவன் சாத்தனி-ம் கூறினான். திலகவதி அழகற்றவளாக இருக்கலாம். ஆன: "அவள் உள்ளம் மிகவும் தூய்மையானது: தனிரக எழில் பெற்றது என்று அவன் உள்ளம் முனங்கியது. மாலை வேளை நெருங்கியதும், இரண்டு பேரும் வரை ச் சுற்றி வரலாமே என்று புறப்பட்டார்கள். பல விஷயங்களிலும் அவர்கள் ஒத்த கருத்து உடையவர்கள் என்பதைப் பேசிப் புரிந்துகொண்டார்கள், பாண்டிய நாட டிற்குக் காலம் இழைத்து விட்ட கொடுமை பற்றி யும் அவல திசையை ஒழித்து மீண்டும் மேனிலை எய்து வதற்கு நாட்டு மக்கள் பாடுபடாமல் இருப்பது குறித்தும் இளவழுதி மன. குமைந்து பேசினான். அதற்கும் காலம் வர வேண்டும், உரிய வேனை வந்தால் எல்லாம் ஒன்று கூடிவிடும் என்று சொன்னசன் சாத்தன்... நாடுகளின் வீழ்ச்சி எழுச்சிகளைப் பற்றியோ, மனி தரின் உணர்ச்சிக் குழப்பங்கள்-வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் பற்றியோ ஒர் சிறிதும் அக்கரை கட்டாது. கர்மயோகி மாதிரிக தனது கடமையை மட்டுமே ஒழுங் காகச் செய்து வருட சூரியன் தனது அன்றைப் பொறுப் புக்கு முடிவு கட்டுவதற்காக மேல் திசையை அணுகிக் கொண்டிருந்தான் மாலை வெயிலின் பொன்னொளி விண்ணையும் மண ணையும் அழ்குபடுத்த முயன்றது. மதுரை மாநகரின் வீதிகள் கலகலப்போடு திகழ்ந்தன. கோயிலுக்குச் செல்லும் பெண்களும் சிறுமிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/59&oldid=906134" இலிருந்து மீள்விக்கப்பட்டது