பக்கம்:விடிவெள்ளி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 59 சிங்காரக் காட்சிகளாக விளங்கி கெருக்களுக்குத் தனி அழகும் உயிர்ப்பும் அளித்தனர் ஞானி மார்பியஸ், களப்பிரன் ஒருவனோடு உலா வந்து கொண்டிருந்தான் , அழகைத் தேடும் அவன் கண் களுக்கு நல்ல விருந்து கிட்டியது "ஆண்டவன் மகத்தான தன்னக்காரனாகத்தான் இருக்க வேண்டும். உலகில் அழகைப் படைத்தான் அவன் , அழகெல்லாம் தனக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றும் அவன் ஆசைப்படுகிறான். மனிதர் தன்னை கஜிக்க வேணும் என்று அவாவுகிற ஆண்டவன், தனக்கு அலுப்பு ஏறபடாமலிப்பதற்காகத்தான் பக்தர்களிடையே அழகிகளை மிகுதியாகப் படைத்திருக்கிறான். அழகான வர்கள் அழகு நிறைந்த மலர்களோடு வந்து தன்னை வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிற ஆண்டவன் சுயநலமி அல்லாமல் வேறு என்னவோ? இத்தன்மையில் அவன் தனது அறிவின் ஒளியையும் ரசனைச் சிறப்பையும் தெளிவுபடுத்தியவாறு நடந்தான். அவன் நண்பன் ஆம் ஆம் என்று கூறியும், வெறும் சிரிப்புடன் தலை அசைத்தும் அவனுக்கு ஊக்கம் ஊட்டி வந்தான். - பயன்படாத அழகயக இருந்தாலும் சரி, பயன்படக் கூடிய அழகாயினும் சரியே. அழகு அழகுதான். யோசித் துப் பார்த்தால் பயன்படாத அழகு என்று எதுவுமே இருக்க முடியாது. எப்போதாவது, எவராவது,எங்கிருந் தாவது அதிை ஒரு தடவையாவது கண் டு களிக்கலாம். தேல் வானத்தில் இயற்கை தினந்தோறும் கவிதை செய் கிறது. அதை அழித்துத் திருத்தி அற்புதங்கள் படைக் கிறது. மீண்டும் அழித்துவிடுகிறது. இந்த அழகெல்லாம் விண் பயனற்றவை என்று சொல்லுகிறவர்களும் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/60&oldid=906138" இலிருந்து மீள்விக்கப்பட்டது