பக்கம்:விடிவெள்ளி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விடிவெள்ளி "சாத்தன், முன்பு பல தடவைகள் அங்கே வந்து பழக்கப்பட்டவனாக இருத்தல் வேண்டும் என்ற உறுதி வழுதிக்கு ஏற்பட்டது. அந்த இரவு நேரத்தில் கூட சாத்தன் தயக்கம் எதுவுமில்லாமல் தண்பனுக்கு வழி காட்டியபடி முன்னே நடந்தான். இருவரும் மடம் போன்ற ஒரு கட்டடத்தைச் சேர்ந்தனர். அங்கு சிறு விளக்கு ஒன்று வெளிச்சம் தருவதாகப் பெயர் பண்ணி அழுது வழிந்து கொண்டிருந்தது. திருநீற் நைப் பட்டை பட்டையாக மேனி முழுவதும் பூசியிருந்த அடியார் ஒருவர் ஒரு துரண் அருகே சாய்ந்திருந்தார். அவர் வாய் முணுமுணுத்தபடி காணப்பட்டது. சிவன் திருப்பெயரை ஒய்வின்றி உச்சரிக்கும் தொழிலில் ஈடுபட் டிருக்கலாம் அது ஆயினும் அவர் விழிகள் தாங்கவில்லை, மோணத் தவ நிலையில் அறைகுதையாக மூடியிருக்கவு மில்லை, சஞ்சல சித்தத்தோடு சுழலும் கருவண்டுகள் போல் மீனுமினுத்த அவரது கண்கள் புதிதாக வந்தவர் கன் மீது மோதின; எத்தனை இனம் கண்டு கொண்டதும் அவற்றில் தனி ஒளி சேர்ந்ததுபோல் தோன்றியது. ஒரு கணத்திற் குத்தான். பிறகு அவை தன்னிலை பெற்று உருண்டு புரண் - ன. எல்லோரும் வந்து விட்டார்களா?"என்று கேட்டான். கணபதி, அடியார் வாய் திறந்து பதில் உரைக்காது, 'உள்ளே - - - - sł 。4° * ? 3 ہ* و چسم ، ہجہ 3-ಹಖ7 எனபது போன் தலையை அசைத்துக் க: . டினார். சாத்தன் வழுதியோடு உள்ளே சென்றான். விசால மான முன்னறையைக் கடந்து. மற்றொரு அன்றக்குள் நுழைந்தார்கள் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/67&oldid=906152" இலிருந்து மீள்விக்கப்பட்டது