பக்கம்:விடிவெள்ளி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக் கண்ணன் இ 57 ஓங்கி உயர்ந்த நின்ற பெரிய கற்தூண்களும், அகண்ட மண்டபமும் போன்ற முகப்புப் பகுதியும், அகல மான உள் அறைகளும், "அடியார்கள் பலர் வசித்து, பூஜை செய்து, பக்தியோடு வாழ்வதற்காக அமைக்கப் பெற்ற மடாலயம் இது என்ற எண்ணத்தையே தந்தன. அவ்வறைகள் எல்லாம் ஒளி மயமாகத் திகழவுமில்லை; இருள் மூடிக் கிடக்கவுமில்லை, சுவர்களின் ஒரங்களில் சில குத்து விளக்குகள் எரிந்துகொண்டு தானிருந்தன. உயரே இருந்து சங்கிலிகளில் தொங்கும் விளக்குகளும் கடருடன் தான் விளங்கின. எனினும் அவை எல்லாம் வேண்டுமென்றே மங்கலாக எரியவிடப்பட்டவை போலவே தோன்றின - இருளும் ஒளிவும் கலந்து திகழ்ந்த அந்த இடத்தில் *மனித உருவங்களும் அவர்களின் நிழல்களும் வேறு உலகத்துச் சாயைகளோ எனும் பிரமையை எழுப்பும் விதத்தில் காட்சி அளித்ததை இளம்வழுதி கண்டான். எல்லோர் கண்களும் அவர்கள் பக்கம் திரும்பின; பின் உருண் டன. இருப்பிலும் எவரும் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசாதது அவனுக்கு வியப்பாகவே இருந்தது - - மேலோட்டமாக நோக்கும்பொழுது அவர்கள் அணை வரும் மெளனமாக பிரார்த்தனை புரிவதற்காகவே அங்கு கூடியிருப்பதாகத் தோன் தும், ஆனால் அவர்சளுடைய நோக்கம் அதுவாக இருக்க முடியாது என்ற ஐயம் இளம் வழுதியின் உள்ளத்தில் திடமாகப் படிந்தது. தனது நண்பன் தன்னை ஏன் இங்கு அழைத்து வந்திருக்கிறான்? என்பது அவனுக்குத் தெளிவாகவேயில்ல்ை. - அவன் அங்கு தென்பட்ட முகங்களைக் கவனித்தான். அன்று காலையில் மாமூலனாரைத் தேடிவந்த இளம்துறவி முன் வரிசையில்உட்கார்ந்திருந்ததைக் கண்டான். அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/68&oldid=906154" இலிருந்து மீள்விக்கப்பட்டது