பக்கம்:விடிவெள்ளி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 0 89 எத்தனை பேர் வந்திருந்தால் என்ன! வந்திருப்பவர் களை நாம் நம்பலாமா என்பதுதானே. முக்கிய விஷயம்’ என்று முணுமுணுத்தான் துறவி. - "சிலரை நம்புவதன் கூடாதா என்பதற்கும் புறச் சான்றுகள் தேடவேண்டியது அவசியமில்லை. அவர் களைப் பார்த்ததுமே, இவர் நம்பிக்கைக்கு உரியவர்இவரை நம்பலாம் என்ற நல்லெண்ணம் நம் உள்ளத்தில் இயல்பாகவே எழுகிறது இளம்வழுதியிடம் நாம் தம் பிக்கை கொல் அதனால் நமக்குத் தீங்கு எதுவும் ஏற்ப டாது என்றே கருதுகிறேன்’ இந்த பதில் கணி'ரென்று ஒலித்தது. ஆனால் இதை மாமூலனார் அறிவிக்கவில்லை. முன்னறையில் வத்த போது துறவியின் பேச்சு காதில் விழுவதைக் கேட்டு நின்று, பின் அமைதியாக உள்ளே அடி எடுத்து வைத்த மங்கையர்க்காசிதான் இவ்வாறு பேசினாள். விளக் கொளி தன் மீது நன்கு படும்படி கூட்டத்தின் முன்னே வந்து நின்றான் அவள் அவள் வந்து மறைந்து நின்றதைக் கவனியாமல்ே பேசிவிட்ட அடியார்க்கு நல்லான் தனது தவறுதலுக்காக மனதினுள் தன்னைத்தானே குறை கூறிக் கொண்டான். பிராட்டியின் கருத்து அதுவாயின் நான் மறுத்துரைப் பதற்கு இல்லை' என்று தெரிவித்தான் அவன். மாமூலனார் அவளுக்கு உரிய பீடத்தைச் சுட்டிக் காட்டினார். எல்லோரும் அவளுக்கு வணக்கம் கூறினர். எனக்கு நீங்கள் மிகுந்த உதவி புரிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து உதவி செய்கிறீர்கள் உங்களுக்கு எவ்வாறு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது என்றே எனக் குப் புரியவில்லை என்று இனம்வழுதி சொன்னான். வி வெ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/70&oldid=906160" இலிருந்து மீள்விக்கப்பட்டது