பக்கம்:விடிவெள்ளி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக் கண்ணன் ) 71 வன நாடும் பாண்டிய மரபினரின் மேற்பார்வையில் இருந்து வந்தது. திருவழுதி வளநாட்டை சேர்க்த செவ்விருக் கை நாட்டில் வாழ்ந்த பெருவழுதியின் வழி வந்தவன் நான். நம் நாடு களப்பிரர்களின் தாக்குதலுக்குக் கீழ்ப்படிந்து விட்ட போதிலும், பலர் உள்ளத்தில் உறையும் வீரம் சத்துவிடவில்லை. எனது தந்தை கல்வழுதி எவ்வளவோ கனவுகள் கண்.ார்.ஆயினும் அவை வெறும் கனவுகளா கவே நின்றுவிட்டன. அவர் ஏற்றி வைத்த உணர்ச்சிப் பொறியை அவியாதவாறு காத்து வந்த என் தாய் எனக்கு உணர்வும் வீரமும் உயர்ந்த எண்ணமும் ஊட்டி வந்தான். நல்ல பயிற்சிகள் பலம் அளித்து வந்தாள். செல்விருக்கை நாட்டில் அரண்மனையை அடுத்த கோயில் நந்த்வனத்தின் ஒரு புறத்தில் பெரிய பாராங்கல் ஒன்று உண்டு. குறிப்பிட்ட ஒருநாளில என் அன்னை அங்கு அழைத்துச் சென்று அந்தக் கல்லை உருட் டிப் புரட்டும்படி கட்டளையிடுவான். இளைஞனான எனக்கு அதற்குத் தேவையான வலு வரவில்லை என உணர்ந்ததும் அவள் பெருமூச்செறிவாள். கண்களில் நீர் தேங்க இனனும் வேனை வரவில்லை' என்று சொல்லி, என்னை அழைத்துக்கொண்டு வீடு. திரும்புவாள். எனது தாயின் செய்கைக்குரிய பொருள் எனக்குப் புரிவதற்கு வெகு காலம் பிடித்தது......முதலில் இதுவும் ஒரு விளையாட்டு என்றும் பிறகு இது ஒரு பயிற்சி என்றும் எண் ணியிருந் தேன் நான். பிறகு ஒரு தடவை, ஏனம்மா இப்படி அடிக்கடி செய்யச் சொல்கிறாய்? எதற்கு வேளை வரவில்லை என்கிறாய் என்று கேட்டேன். அந்தக் கல்லைப் புரட்டித் தள்ளினால் எல்லாம் உனக்கு விளங்கிவிடும்' என்று சொல்லி என் தாய் நெடு மூச்செறிந் தாள். அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காக அக்கல்லை உருட்டிவிட வேண்டும் என்று ஆசை வளர்ந்து வந்த எனக்கு, அதன் கீழ் என்ன மறைந்து கிடக்கிறது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/72&oldid=906164" இலிருந்து மீள்விக்கப்பட்டது