பக்கம்:விடிவெள்ளி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ) விடிவெள்ளி அறிய வேண்டும் என்ற துடிப்பும் பிறந்தது. எனவே நான் எனது உடல் வலிமை அதிகம் சேர்க்க அரும்பாடு பட்டு வந்தேன். ஆயினும் அந்தக்கல் என்னிலும் வலு மிகப் பெற்றதாக இருந்தது. நான் வெற்றி பெற முடியாமல் போகிற ஒவ்வொரு மு ைதயும் என் தாயின் முகம் வேதனையின் ஓவியமாக மாறிவிடும் துயர மூச்செறிந்து இன்னும் வேளை வர வில்லை' என்று அவன் முனங்குவான். இந்தத் தடவை. எப்படிவும் வெற்றி பெற்றே தீருவது என நான் உறுதி பூண்டேன், முயன்றேன். வெற்றி கண்டேன்......" 'அந்தப் பேருங்கல்வின் கீழே என்ன காணப்பட்டது? என்று ஆவலோடு கேட்டான் அடியார்க்கு நல்லான். அவனுடைய அவசரத்தைக் கண்டு குறுநகை புரிந்தார் புலவர்' அந்தப் பாதாங்கல்வின் கீழே ஒரு பள்ளத்தில் பெட்டி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை வெளியே துக்கு என்றால் அம்மா எடுத்துத் திறந்தேன். அதனுள் ஒரு வாள் இருந்தது. . "வானா? என்று வியப்புடன் ஒலித்தன பல குரல்கள். ஆமாம். என் தாய் என்னை அன்போடு தழுவிக் கோண்டு வாழ்த்துக் கூறினாள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். வேளை வந்துவிட்டது; மகனே விடிவு காவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூவினாள் பாண்டியரின் வீரவாள் இது உன் தந்தை இதை உயிரெனப் போற்றி வந்தார். போதிய வீரமும் தகுதியும் பெற்றதும் உனக்கு இந்த வாள்கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் அதை இங்கே பதுக்கி வைத்தார். நீ அதை எடுத்துவிட்டாய் இனிமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/73&oldid=906166" இலிருந்து மீள்விக்கப்பட்டது