பக்கம்:விடிவெள்ளி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக் கண்ணன் E 73 உன் தந்தையின் இதர ஆசைகளையும் நீ நிறைவேற்ற வேண்டும்; அதற்குக்காலம் உனக்குத் துணை புரியட்டும். என வாழ்த்தினாள். நம் நாட்டின் வீர வரலாற்றை ఛాణా த ய்தான் எனக்குப் புகட்டி வந்தாள். மேற்கொண்டு செயல்புரியும் வழிகள் பற்றி ஆராய்வதற்காகவே நான் இங்கு வந்தேன். வந்த இடத்தில் இந்தப்பிராட்டியாரை யும், புலவர் பெருமானையும், சாத்தன் கணபதியையும் கண்டு அவர்கள் அன்பைப் பெறும் பேறு எழுதியதற் காக மகிழ்கிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட் டியதையும் என் பாக்கியம் என்றே கருது கிறேன்...' 'அதெல்லாம் சரிதான். நீ இங்கு வந்தபிறகு எதிர்ப் பட்ட நிகழ்ச்சிகளைம்பற்றி இவர்களுக்குச் சொல்லு வர குணத்தேவரைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கு மறந்து விடாதே! என்று மங்கையர்க்கரசி கூறினாள். 8. ஆலோசனை மதுரை மாநகரின் ஒரு மூலையில் தனியானதொரு இடத்தில் சிலர் கூடி வரகுணத் தேவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த இரவிலே தேவர் கோபத்தால் கொதிப்புற் மிருந்தார் அதற்குக் காரணம் இல்லாமலில்லை... - பகலில் அவர் இளம்வழுதியோடு உரையாடிக்கொண் டிருந்தபோது அவருக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு வரவும். தேவர் அவனை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார் அல்லவா? கூற்றன் நாயனார் மாளிகையில் பேச்சு நிகழும் போதெல்லாம் அவர் மனம் பேருவகை அடைந்தது. இன்று நமக்கு நல்ல வெற்றி கிட்டப்போகிறது. குற்றவாளிதானாகவே வந்துநம்மிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/74&oldid=906168" இலிருந்து மீள்விக்கப்பட்டது