பக்கம்:விடிவெள்ளி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? விடிவெள்ளி சிக்கிவிட்டான். அவனைப் பிடித்துக் கொடுத்து இவர் களிடம் நாம் நல்ல பெயர் பெறலாம் என்று அவர் உள்ள ம் இனிய கனவு கண்டு களித்தது. கூத்தன் நாயனாரும் விஷ்ணுசிம்மனும் முந்திய தினத் தின் நிகழ்ச்சி பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அவ்விருத்தில் வரகுணத்தேவரும் பங்கு பெற்றிருந்ததால் அவருக்கு அது புதிய விஷயமில்லைதான். வீரன் உக்கிர ந தன் முகம் களித்துச் சற்று கடுகடுப்பு:கப் பேசிய சொந்தன் நாயனாரின் இதயத்தைச் சுட்டன. அந்த வடு எளிதில் ஆறிலிடுமா என்ன? தான் துரங்கவில்லை என்று காட்டுவதற்கும் தனது அதிகாரத்தையும், ஆள் பலத்தை யும் கொண்டு நாட்டை உள்ளுற அரிக்க ஆரம்பித்துள்ள கறையான்களை அழிப்பதற்குத் திட்டம் தீட்டவும் விரும்பனான் அவன். அதற்காகவே அவன் தேவரை அழைத்து வரக்கட்டளையிட்டான். - - வரகுண த்தேவர் இளம்வழுதிமூலம் அறிந்த உண்மை களை எடுத்த எடுப்பிலேயே மற்றவர்களிடம் அறிவித்து விடவில்லை. நாயனார் தனது சந்தேகங்களைச் சொல்லச் சொல்ல, அவ்வப்போது சில சிறு செய்திகள் தன் காது களை யும் எட்டின என்று கூறி உரையாடலுக்கு உயிரும் உணர்வும் ஐ டி வந்தார். ‘என்ன நடவடிக்கை எடுப்பது, யாரை எதிர்ப்பது, வீரர்களை நாடெங்கும் ஏவிவிடுவதா, உளவாளிகளை அனுப்புவதா? என்பதெதுவும் புரியாமல் கூற்றன் நாய னகர் குழம்பிய வேளையில், தேவர் திருவாய் மலர்ந்தார்: முன்னிரவில் மாளிகையினுள் ஈட்டி எ தியத் துணித்தவன் பித்தனாகவோ, வெறும் வெறியனாகவோ இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன். நாட்டு திலைமையையும் பலரது வெறுப்பு உணர்வையும் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/75&oldid=906170" இலிருந்து மீள்விக்கப்பட்டது