பக்கம்:விடிவெள்ளி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விடிவென்னி கொள்ள முடியவில்லை அவரால், மெய்யாகவா? என்று வரண்ட குரலில் கேட்டார். திலகவதி மெளனமாகத் தலை அசைத்தாள். 'விழிப்புடன் கவனித்துக் கொள்ளும்படி சொன் னேனா இல்லையா, திலகம், நீ இப்படிக் கோட்டைவிட்டு விட்டாயே?’ என்று வருத்தத்துடன் பேசினார் தேவர். "இங்கு வந்தவன் எங்கோ வெளியே போயிருக்கிறான். அவன் திரும்பி வருவான். வந்ததும் தானே அழிைத்து வருகிறேன்" என்று சொல்லி களப்பிர ஆட்களை அனுப்பி விட்டார். அவர் உள்ளத்தில் குழப்பம் குடிகொண்டது. மாலை நெருங்க, நெருங்க அவர் மனக் குழப்பம் அதி கரித்து வந்தது. கூற்றன் நாயனார் இல்லத்தில் அன்றும் விசேஷ விருந்து உண்டு. நாயனாரை எப்படிச்சந்திப்பது அவரிடம் என்ன கூறுவது? என்று தவித்துக் கொண் டிருந்த தேவர் மெதுவாகத்தான் அரண்மனை சேர்ந்தார். தேவர் அங்கு போய்சேர்ந்த வேளையில் பரபரப்பான சூழ்நிலை அவரை எதிரேற்றது. ஞானி மார்பியஸ் அடி பட்டதும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குழப்பமும், சூடான பேச்சில் எதிரொலி செய்தன. வீரன் உக்கிரநாதன் குமுறிக்கொதித்துக் கொண் டிருநதான். எனது தண்டனை இழிவு படுத்தக்கூடிய அளவு துணிவு ஏற்பட்டு விட்டதா இங்குள்ளவர்களுக்கு? அப்புறம் நமது ஆட்சிக்கு என்னதான் மதிப்பு' என்று ாடமாய்ப் பேசினான் அவன். . - - "வீடு தேடி வந்து தங்கியிருக்கும் விருந்தளிேக்கு அளிக்க வேண்டிய கெளரவத்தை அளிக்கத் தவறி விட்டவன் போல் வருந்தினான் கூற்றன் நாயனார். நடந்தது பற்றிக் கேள்வியுற்றதும் இன்று நம்மைத் தேடி வந்தவன்தான் இதைச் செய்திருக்கிறான். அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/77&oldid=906174" இலிருந்து மீள்விக்கப்பட்டது