பக்கம்:விடிவெள்ளி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - ?? அப்பொழுதே அ.க்கி வைக்க இயலாமல் போய்விட்டது. அவனை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டுப் போடாமல் நான் புறப்பட்டு வந்தது என் தப்புதான்' என்று வரகுணத்தேவர் நினைத்தார், இனியும் நாம் வாளாயிருத்தல் தகாது. கடுவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தீர்மானித் தான் கூற்றன். நாட்டின் ஒவ்வொரு பதுதியின் நிலைமை யையும் ஆராய்ந்து வருவதற்காக, நம்பகமான களப்பிரர் களை அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தான் அவன் யார் யாரை அனுப்புவது என்பதும் திட்ட மிடப்பட்டது. - அந்த ஆலோசனைக் கூட்டம்முடிவு பெற்றதும்தேவர் தனது இல்லத்துக்குப் புறப்பட்டார். உயர்ந்த ஜாதிக் குதிரைகள் பூட்டிய அவருடைய ஆடம்பரமான வண்டி இரவு நேர அமைதியைச் சாக அடித்தபடி வீதிகளில் விரைந்தோடியது. ஆள் நடமாட்டமோ இதர போக்கு வரத்தோ இல்லாததால் வண்டியோட்டி குதிரைகளை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். வேகம் குறையாமலே வேறொரு வீதியில் திரும்பியது வண்டி. அத்தெருவின் நடுவில் மூன்றுபேர் நடந்து சென் றனர். தடத-வேன்று வண்டி திரும்பிவரவும் அவர்கள் வெருண்டு, திணறி ஒரங்களுக்கு ஓடினார்கள். பிறகு நின்று முறைத்தார்கள். - 'மடையன்! இப்படியா வண்டி ஒட்டுவது என்று கூவினான் அவர்களில் ஒருவன். 'அந்தக் குதிரைகளுக்கு இருக்கிற அறிவுகூட அவ னுக்கு இராது. அதனால்தான் அவற்றைப்போய் விரட்டு கிறான் என்றான் மற்றொருவன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/78&oldid=906176" இலிருந்து மீள்விக்கப்பட்டது