பக்கம்:விடிவெள்ளி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( தி, நாங்கள் வெறும் நாடோடிகள்- ஆண்டிகள் ஊர் ஊராகச் சுற்றுவதுதான் எங்கள் வேலை. இந்த ஊருக்கு வந்து விட்டு...' விளக்கமாக பதில் சொல்ல முன்வந்தான் ஒருவன், அவ ைபேச்சுக்கு ஊடாகத் தடிவெட்டிப் போட்டான்' பின்னர் வந்த இருவரில் ஒருவன். இவர் யார் தெருவில போகிறவர்களை எல்லாம் அதட்டி ஆக்கினை செய்வதற்கு வீதிகளில் அவர் வண்டி மட்டும்தான் போகலாம் என்ற விதி எதுவும் கிடையாதே என்றான் அவன். அதைக் கேட்டதும் எப்பொழுதோ காதில் விழுந்து பழகியகுரலாக இருக்கிறதே? என்ற நினைப்புடன்,தேவர் தலையை மேலும் வெளியே நீட்டினார். வினக்கொளி அவர் முகத்தில் படிந்து அதைத் தெளிவாக எடுத்துக்காட்டியது. ஒகோ, அரகுணத் தேவரா! அவர் இது மட்டும் தானா கேட்டார்! இன்னும் எப்படி வேண்டுமானாலும் தடை விதிப்பாரே? களப்பிரர்களின் துணை இருக்கிற போது அவர் இந்தத் தெருவில் என்ன, இந்த நகரிலேயே கொடி கட்டிப் பறக்கவிடத் துணிந்தால் நாம் அதிசயிப்பதற். கில்லை என்று கூறி அவன் 'கட'கட'வெனச் சிரித்தான் . 'ஏய், வீணாக உளறிக் கெட்டும் நீ யார்? இப்படி வெளிச்சத்தில் வந்து நில் என்று மிடுக்காகச் சொன்னார் o - - f

عية "இளம்வழுதியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்களே! என்ற எக்காளப் பேச்சுடன் முன்வந்து தின்றான் அவன். தேவர் திடுக்கிட்டார். அவனை அவர் அவ்வேதை யில் அந்த இடத்திலஎதிர்பார்க்கவில்லை. அப்பொழுது அங்கே அவன் அருகில் சிலர் நின்றார்கள் என்று அவரால் உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/80&oldid=906181" இலிருந்து மீள்விக்கப்பட்டது