பக்கம்:விடிவெள்ளி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விடிவெள்ளி கோபமும் ஆத்திரமும் கொதித்தன. இளம்வழுதி தன் வீட்டிலிருந்து நழுவி விட்டதைப் பெருஞ் செயலாகதனக்கு மிகுந்த அவமானம் விளைவிப்பதாக-அமைந்தது பலர் நடுவில் தன்னை எடுத்தெறிந்து பேசியதும், வண் டியை மடக்கிச் சூளுரை கூறியதும் தான் என்பதை அண் ை:ண் ணிப் புகைந்தது அவர் மனம். ‘எங்கிருந்தோ வந்தான். கணத்துக் கணம் மிகுதி யான வலிமை பெற்று வர்ைகிறான்' என்றே தோன்று கிறது. அவனை இன்னும் வளர விடுவது ஆபத்தையே விவை விக்கும். விரைவில் ஒழித்துக்கட்ட ஆவன செய்ய வேண்டும்' என்று நினைத்தார். தேவர். 'கொல் உலை

மூக்கின் அல்ை மூச்சு உயிர்த்தார். 9. சந்திப்பு கண்கன் எத்தனை எத்தனையோ உருவங்களால் வசீகரிக்கப்படுகின்றன. ஆயினும் ஒருமுறை கண்ட ஒரு உருவை மீண் டும், மீண்டும் காணத் துள்ளுகின் தன. அலை: கவர்ச்சிக்கும் சக்தி பெற்ற அந்த எழில் உருவம் எதிரே இல்லாதபோது, அது எங்காவது தென்படுமா?" என்று விழிகள் சுழல்கின்றன. அந்த உருவைக் கண்டு விட்டதும் தனி ஒளி பிறக்கிறது சுழலும் கண்களிலே! மனம் எவ்வளவோ விஷயங்களைப்பற்றி எண்ணாம வில்லை. எனினும் எப்பொழுதே கண் வழியே உள்ளத் தில் புகுந்துவிட்ட ஒரு உருவத்தைப்பற்றி எண்ணிக் கொண்டே இருப்பதில் அது தனி இன்பம் பெறுகிறது. மற்றவர்களிடம் காண முடியாத அழகை, இனிமையை, தனித்தன்மையை அந்த உருவத்திடம் காண்பதாக நினைவு வர்ணம் பூசுகிறது. அந்த நினைப்பே மிக்க சுவை உடையதாகி விடுகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/83&oldid=906187" இலிருந்து மீள்விக்கப்பட்டது