பக்கம்:விடிவெள்ளி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 8? நமக்கு உதவிபுரிய வந்தவர் என்ன ஆபத்தில் சிக்கிக் கொண்டாரோ! களப்பிரர்கள் பொல்லாதவர்கள் ஆயிற்றே! தனியே அகப்பட்டுக் கொண்டு அவர் என்ன பாடு படுகிறாரோ என்றுதான் வேறு எதற்காக பயப் டிடப் போகிறாள் அவள்? அல்லது யாருக்காகக் கவலை கொள்ளப் போகிறாள்' என்று கூறிச் சிரித்தாள் தோழி பேசாமல் இரடி'..ஐயோ, பேசாமலிரேன்! என்று அமுதம் தொடர்ந்து தொல்லைப்படுத்தியதையும் தோழி பொருட்படுத்தவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னாள் "இரவு முழுவதும் இவளுக்குத் தூக்கமே கிடையாது. களப்பிரர்கள் வெறித்தனமாக ஆடி ஒடி அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தார்களா? ஐயோ பாவம், அவர் எப்படித்தான் தப்புவாரோ-எங்கே போய் மறைத் திருப் பாரோ என்று வருத்தப்பட்டு வாடித் தவித்தாள். துரங்க லாம் என்று கண்ணை மூடினால், மனம் தூங்கவா செய் கிறது? காப்பாற்ற வந்தவரை அனேக கணப்பிரர்கள் துரத்துவது பேசிலவும், குதிரை வீரர்கள் வந்து விரட்டு வது போலவும், சண்டை போடுவது போலவும் கனவுகன். ஆனால் ஒன்று. எந்த நிலைமையிலும், நெருக்கடியிலும் வெற்றி அந்த வீர இளைஞருக்குத்தான் இல்லையா? என்று கேட்டபடி தோழி அமுதத்தைப் பார்த்தாள். . வெட்கமும் மகிழ்ச்சியும் பொங்கிப் பரவ, மூகம் தாழ்த்தி நின்ற தலைவி போடி!' என ஒற்றைச் சொல் சிந்தினாள். . அவள் நின்ற தோற்றமும், தலையை ஆட்டிச் சொல் .” உதிர்த்த விதமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காந்தக் காட்சிகளாகவே விளங்கின. அவனுக்கு அவன் ரசித்துச் சிரித்தான்! பின்னே அமுதவல்லி இப்போ பேசாமலே நிற்கிறாளே?' என்றான். . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/88&oldid=906196" இலிருந்து மீள்விக்கப்பட்டது