பக்கம்:விடிவெள்ளி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விடிவெள்ளி 'உன் பெயர் கூட அவருக்குத் தெரிந்திருக்கிறதடி: அப்புறமென்ன?’ என்று கெண்டை பண்ணினாள் தோழி. அமுதவல்வியின் அகன்ற கண்களின் சுடர்மணிகள் விழிக்கடையில் ஒதுங்கின அவனைக் கண்டு மகிழ்வதற் காகத்தான் உள்ளத்தில் விம்மிய மகிழ்வுப் பேரலையின் சிறு நுரைபோல் இளநகை ஒதுங்கியது அவள் இதழ்க் கடையில். எனினும் அவள் முணமுணத்தாள். நேரமாகிறது...எல்லோரும் வந்து விடுவார்கள், வ: அவள் நகர்த்தாள். தோழியும் நடந்தாள். 'உன் பெயர் எனக்குத் தெரியாதே? அதைச் சொல்ல வேண்டாமா?’ என்றுவிளையாட்டாகக்கேட்டான் வழுதி தெரிய வேண்டிய பெயர் தெரிந்து விட்டதல்லவா? அது போதும் என்று சொன்னாள் தோழி திரும்ப்ேபாராமலே நடந்தாள் அவள் அமுதவல்வி திரும்ப நோக்கியவாறே போனாள். யாராவது வந்து விடப் டோகிறார்கள்!' என்று அவளுடைய தோழி அவளுக்கு எச்சரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது பொழுது. . அவ்விதம் எச்சரிப்பதற்கு அருகில் எவரும் இல்லாத தனால் இளம்வழுதி அமுதவல்லி மீது வைத்த விழிகளை வேறுபக்கம் திருப்பாமலே நின்றான். அவள் பின் சென்ற மனதைச் சுண்டி இழுக்கும் நினைப்பற்றவனாகவே தின் தான். அவள் காட்சிஎல்லையிலிருந்து மறைந்துவிட்ட பிறகும் கூட அத்திசையிலேயே பார்வை பதித்து நின்ற அவனை விழிப்புறச் செய்வதற்கென்தே வருவது போல் பேரோசை ஒன்று எழுந்தது. நெருங்கி வருவது போல் ஒலித்தது. X

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/89&oldid=906198" இலிருந்து மீள்விக்கப்பட்டது