பக்கம்:விடிவெள்ளி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 91 வழுதி, உனது வீரம்தான் உனக்கு உறுதியான துணையாகும். உடல் வலிமையும், அறிவின் பலமும், உள்ளத்தின் உறுதியும்தான் உனக்கு இறுதிவரை துணை நிற்கக் கூடிய சக்திகளாகும். அவற்றை நம்பிச் செயல்புரி տաո Ա. frgsi' - தன் தாயின் வார்த்தைகளை இளம்வழுதி மறந்தவ னல்லன். மேலும், வீரத்துக்கு எத்தகைய மதிப்பு இருந் தது என்பதை அவனாகவும் அறிந்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் உள்ளம் எளிதில் சோர்வு அடைந்து விட எதுதான். இருமுறைகள் ஏமாற்றம் அடைந்த இளம்வழுதிக்கு அளவிலா ஆனந்தம் அளிக்க விரும்பியதுபோல் சந்தர்ப் பம் செயலாற்றியது. அவன் எங்கெங்கோ அலைந்து திரிந்தபோது ஒரு வீதி யில் ஒரு வீட்டின் சாளரம் ஒன்றிலே அவன் மனதுக்கினிய காட்சி பூத்தது. வியப்புடன் அவனையே கவனித்தபடி தோன்றிய அழகுமுகம் அமுதவல்லியினுடையது என்ப தைக் கண்டு கொண்டதும் அவன் களிப்படைந்தான். உவகையுடன் அவ்வீட்டை அணுகும் வேளையில், சான ரத்துச் சுந்த உதயம் திடீரென்று மறைந்துவிட்டது. வாடிய அவன் முகம், மீண்டும் மகிழ்வால் முழுதலரும் படி ஒரு வாசலில் தோன்றினாள் அமுதம் அவனை அழைத்தாள். அவனும் அவளோடு வீட்டின் பின்புறத் தோட்டத்தில் அடி எடுத்து வைத்தான். 'உன்னை இவ்வேளையில் இப்படிச் சந்திக்க முடியும் என்று தான் எண்ண வேயில்லை என்று அவன் சொன் :ைன் , - - அவள் மகிழ்வு குலுங்கத் தலையசைத்தாள். நானும் நினைக்கவில்லை. நீங்கள் தனியாக இந்நகர வீதிகளில் திரிவது ஆபத்து இல்லையா?’ என்றாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/92&oldid=906207" இலிருந்து மீள்விக்கப்பட்டது