பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாவது பதிப்புரைஇருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் வணிகம் செய்து பொருளிட்ட வந்தவர்கள் "கும்பெனியார்" என்று அழைக்கப்பட்ட ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார். அரசியல் தலைமையை இழந்து, குழப்பம் மிகுந்து இருந்த அன்றைய அரசியலைத் தங்களது சூழ்ச்சிகளினாலும் சித்து விளையாட்டுகளினாலும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். தங்களது வெடிமருந்துத் திறனால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மன்னர்களை அடக்கி ஒடுக்கி தங்களது எடுபிடிகளாக்கி, ஆற்காட்டு நவாப்பின் அதிகாரம் பெற்ற முகவர்களாக அன்று அவர்கள் பவனி வந்தனர்.


இந்த ஏகாதிபத்திய வெறிநாய்களை விரட்டியடிக்க முன்வந்தவர்கள் மறவர் சீமை மன்னர்கள் மட்டுமே. இந்தப் பரங்கிகளின் ஏகாதிபத்திய பேராசையினைப் பகற்கனவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் இராமநாதபுரம் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1760-1809). இந்த மன்னர் பன்னிரண்டு வயதாக இருக்கும் பொழுது, இராமநாதபுரம் கோட்டையைப் பீரங்கிகளால் துளைத்து ஆற்காட்டு நவாப்பிற்கு வெற்றியைப் பெற்றுத்தந்த கும்பெனியார், இந்த இளம் மன்னரையும் இவரது தாயாரையும் கைதிகளாக்கி திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தனர்.


சேதுபதி சீமையில் எழுந்த கலகத்தை சமாளிக்க இயலாத ஆற்காட்டு நவாப், இளம் மன்னரை சிறையில் இருந்து விடுவித்து சமாதானம் செய்து கொண்டார்.

பத்தாண்டுச் சிறைவாசம் முடித்து ஆட்சிக்கு வந்த சேதுபதி மன்னர், ஆற்காட்டு நவாப்பையும் அவரது அடிவருடியான கும்பெனியாரையும் அஞ்சாது எதிரித்தார். அவர்களது ஆணைகளைப் புறக்கணித்தார். அவர்களது வெடிமருந்து ஆயுதங்