பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86
எஸ். எம். கமால்
 

முயற்சி செய்தனர். இவ்வளவு பெருந்தொகையான 'புதையலை' கலெக்டர் கைப்பற்றியதற்கு கவர்னர் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.[1]

அரசரது அந்தரங்கப் பணியாளர்களான இராமசாமி சேர்வைக்கார், முத்தழகு, வீராசாமி, நாச்சியப்பன், சமையல் வெங்கட்டராம நாயுடு ஆகியவர்களை திருச்சிக் கோட்டையிலிருந்து வரவழைத்து விசாரித்தனர். அவர்களில், ஒருவரது வாக்குமூலத்திலிருந்து ஒரு கிணற்றுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில பணப்பைகளையும் கைப்பற்றினர்.[2] மேலும், சேதுபதி மன்னர் இராமநாதபுரத்திலிருந்து திருச்சி புறப்படும் சமயம் எடுத்துச் சென்ற பணப்பெட்டி, நகைப்பெட்டி ஆகிய இரண்டு பெட்டிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுவதற்காக அரண்மனையிலுள்ள நான்கு கணக்கப்பிள்ளைகளை படாதபாடுபடுத்தினர். இவ்விதம் இராமநாதபுரம் அரசை கைப்பற்றியதுமல்லாமல், இராமநாதபுரம் அரசரது சொந்த சொத்துக்களையும். அணி மணிகளையும் கைப்பற்றுவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இவை பரங்கிகள் இராமநாதபுரத்தில் மட்டும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்ல. அவர்களது ஏகாதிபத்திய கொள்கையின் உள்ளடக்கமான பகல்கொள்ளையை, இந்திய நாட்டில் எங்கெல்லாம் தன்னரசு மன்னர்களை அவர்களது ஆட்சியிலிருந்து அகற்றி, தங்களது இரும்புப் பிடியை இறுக்கிக் கொண்டார்களோ, அங்கெல்லாம் இத்தகைய இழி செயல்களில்தான் அவர்கள் ஈடுபட்டனர். தஞ்சாவூர், குடகு, நாகபுரி, பேரார் மன்னர்களிடத்திலும் அவர்களது இராஜ குடும்பங்களிலும் பரங்கிகள் நடத்திய முறைகேடான கொள்ளைகளுக்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.[3] இத்தகைய ஈனச் செயல்


  1. Revenue Consultations, Vol. 62 B, 11-4-1795, p. 1320
  2. Revenue Consultations, Vol. 62 A, 24-3-1795, pp. 1112, 1136-230
  3. Srinivasachari. C.S., The Inwardness of British Annexation in India (1951), p. 68