பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

எஸ். எம். கமால்

களை அடுத்த நாட்டிற்கு எடுத்துச் சென்று விற்றுவிட்டு தங்கள் நாட்டிற்குத் தேவையான பொருட்களை அங்கிருந்து பெற்று வருவது வழக்கம். 18ம் நூற்றாண்டு இறுதியில், இந்தியாவில் விற்பனை செய்ய ஆங்கிலேயரிடம், அரசர்களுக்குரிய ஆடம்பரப் பொருட்களைத் தவிர வேறு பொருள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களுக்குத் தேவையான கைத்தறித் துணிகள். மிளகு, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றிற்கு விலையாகத் தங்கம், வெள்ளி நாணயங்களைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை, தங்கத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்? ஆதலால் முதல் இல்லாத வியாபாரம் செய்தனர்! அதாவது கொள்ளை -இந்தியப் பாட்டாளிகள் பாடுபட்டு உற்பத்தி செய்தவைகளையும், சேமித்து வைத்திருந்தவைகளையும் வன்முறையில் கொள்ளையடிப்பது. இதன் காரணமாக, கி. பி. 1763-ல் இந்தியாவிலிருந்து 30 லட்சம் பவுன் தொகையை இலாபமாக இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றதாகக் ஸ்கிராப்டன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.[1] அவர்கள் நாட்டிலிருந்து ஒரு அவுன்சு அளவு தங்கத்தையோ, வெள்ளியையோ கொண்டு வந்து இந்தியாவில் முதலீடு செய்ய முடியாதவர்கள். இவ்வளவு தொகையை அப்பொழுது இலாபமாக ஈட்டியிருப்பது ஆச்சரிய மான செயல் அல்லவா?


  1. Palmi Dutt. R., India Today (1947), p. 90