பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
IX

களை முறியடிக்க ஆயுதச்சாலை நிறுவி, இறுதி மோதுதலுக்கு ஆயத்தமானார். ஆனால் சூழ்ச்சியால் அரண்மனையைச் சூழ்ந்து மன்னரை மீண்டும் சிறைப்படுத்தினர். மறவர் சீமையில் மக்கள் கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம். மன்னருக்கு ஆதரவாக எழுந்த இந்தக் கிளர்ச்சிகளும் துரோகத்தினால் முறியடிக்கப்பட்டன. மன்னர் திருச்சிக் கோட்டையிலிருந்து குண்டு துளைக்காத சென்னைக் கோட்டை அறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சிறைவாசத்தையும் சேர்த்து மொத்தம் இருபத்துநான்கு ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அவரது வாழ்க்கை முடிந்தது.


இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திருவிரண்டும் மாறி, பழிமிகுத்திட்டாலும், விதம்தரு கோடி இன்னல் விழைந்தெம்மை அழித்திட்டாலும், சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேன் என பின்னர் சுதந்திரப் பிரகடனம் செய்த மகாகவி பாரதியின் கவிதைக்கு முன்னோடி வடிவாக அமைந்துள்ளது இந்த மன்னரது வாழ்க்கை.


ஏறத்தாழ இருநூறு ஆண்டுகாலமாகத் தமிழக வரலாறும் தமிழக மக்களும் அறிந்து கொள்ளாத இந்த வீரமறவனது தியாக வாழ்க்கையை, கும்பெனியாரது துசுபடிந்த ஆவணங்களில் இருந்து திரட்டி, எழுத்து வடிவில் தமிழக மக்களுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தி அறியச் செய்த பெருமை சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் டாக்டர். எஸ். எம். கமால் அவர்களையே சாரும்.

இந்த இளம் சேதுபதி மன்னர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் மிக்க ஆர்வத்துடன் பலவித இடர்ப்பாடுகளுக்கிடையில் தமிழக அரசின் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்து ஆவணங்கள், மடல்கள், அறிக்கைகள், தொகுப்புப் பதிவேடுகள் ஆகியவைகளில் இருந்து சேகரித்து, அழகு தமிழில் சிறந்த வரலாற்று நூலக ஆசிரியர் அமைத்து வழங்கி இருப்பது அருமையிலும் அருமை.

இந்த நூலுக்கு 1989ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாள் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூலா