பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

103


25-5-1795 அன்று இன்னொரு கடிதத்தையும்.[1] இராமநாதபுரம் மன்னர் கவர்னருக்கு அனுப்பி வைத்து, தமது பதவி நீக்கம், சிறை வாசம் ஆகியவைகளுக்கான காரணங்களைத் தெரிவிக்குமாறும், இயலுமானால் நான்கு ஐரோப்பியர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்து தன் முன்னால் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார். அதற்கும் பதில் இல்லை. அதிகாரச் செருக்கும் ஆணவப்போக்கும் மிகுந்த ஆங்கிலேயரிடம், இந்த நாட்டின் மண்ணிற்கு உரிய நியாயத்தையும், நேர்மையையும் எதிர்பார்ப்பதில் பலனில்லைதான். அத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர் அல்லவே. கீழை நாடுகளின் கலைப் பொருட்களையும், மிளகு, பாக்கு, சந்தனம் போன்ற இயற்கை வளங்களையும் அள்ளிச் சென்று, வணிகம் நடத்த வந்தவர்கள் தானே? தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் காரணமாக ஒற்றுமை இழந்த மன்னர்களை ஒடுக்குவதற்கு ஊழல் நிறைந்த முகம்மதலி நவாப்பிற்கு உறுதுணையாக வந்தவர்கள்தானே இந்தப் பரங்கிகள்!

வாய்ப்புகள் ஏற்படும் பொழுதெல்லாம், தங்களது படையின் வெடிமருந்துத் திறனைக் காண்பித்து, தமிழகத்தில் வீர மறவர்களின் தன்னாசுகளை அவர்கள் தமது உடமையாக்கிக் கொண்டார்கள். தங்களது இந்தக் குறிக்கோளுக்காக எல்லா விதமான தந்திர மந்திரங்களையும். உபாயங்களையும் உத்திகளையும், பழிக்கு எதிரான பண்புகளாகக் கையாண்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், பழி, பாவம், இழிவு எல்லாம் எண்ணிச் செயல்பட வேண்டிய பண்பாடுகள் அல்ல. ஆனால் இவர்களுக்கெல்லாம், மூல குருவாக கும்பெனியாரின் மிகச் சிறந்த பிரதிநிதியாக விளங்கிய வாரன்ஹேஸ்டிங்ஸ் வங்காளத்திலும், அயோத்தியிலும் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. லஞ்சம், ஊழல், சூழ்ச்சி, கொலை, கொள்ளை, கிழக்கிந்தியக் கும்பெனியின் பெயரால் நேர்மையுள்ளங் கொண்ட எட்மண்டு பர்க் பிரபு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாரன்ஹேஸ்டிங்ஸ் மீது ஊழல் குற்றம் சாட்டினார். தமது குற்றச் சாட்டுக்களுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி எட்டு ஆண்டுகள் திறமையான முறையில் மக்களுக்கு புரியும்படி புள்ளி விவரங்களுடன்


  1. Edmund Burke, Impeach ment on Warren Hastings (1908), pp. 14-15