பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
X

கத் தேர்வு செய்து முதற்பரிசும் பாராட்டிதழும் வழங்கியது. பொது நூலகத் துறையைச் சார்ந்த பொது நூலகங்களுக்கு, இந்த நூலின் ஐநூறு படிகளை வாங்கி வழங்கியது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது குறிப்பாக, இந்திய விடுதலை பொன்விழா ஆண்டில், இந்த நூலின் இரண்டாவது பதிப்பு வெளிவருவதை நாட்டுப்பற்று மிக்க தமிழ் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என நம்புகிறோம். மேலும் இந்த பதிப்பு, சேதுபதி மன்னரது சீரிய தியாகத்திற்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கையாக என்றும் விளங்கும் என எண்ணுகிறோம்.

- சர்மிளா பதிப்பகம்

இராமநாதபுரம்

1997ம் ஆண்டு

நவம்பர் - 16