பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

எஸ். எம். கமால்

உற்பத்தி சாலையையும் கண்டுபிடித்து அதனைக் கும்பெனியார் கைப்பற்றி விட்டனர்.[1] இந்த உற்பத்திசாலை இராமநாதபுரம் கோட்டைக்கு பத்துக்கல் தொலைவில் நெருக்கமான காட்டுப் பகுதிக்குள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உற்பத்தி சாலைக்கு எந்த நாடு உதவியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும், டச்சுக்காரர்கள்தான் இந்தத் திட்டத்திற்கு உதவியிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக கி.பி. 1722-ல் இராமநாதபுரத்தில் பீரங்கிப் படை அமைப்பதற்கு அவர்கள்தான் உதவியிருந்தார்கள்.[2] அடுத்து கி.பி. 1757-லும் கி.பி. 1767-லும் வணிக ஒப்பந்தங்கள் மூலம் டச்சுக்காரர்கள் தான் மறவர் சீமையுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தனர். மன்னரது இராணுவத் திட்டம் முழுவதும் காகிதத் திட்டமாக்கப்பட்டு விட்டது! அவரது சுதந்திர எண்ணங்கள் இழைந்த சிந்தனைகள், முனைந்து துவக்கிய முயற்சிகள், முழுமை பெறாத கனவாகி விட்டன!

எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை எதுவும் இல்லாத நிலையில், அவரது திருச்சி சிறைவாழ்க்கை சிறிது சிறிதாக மாமூல் வாழ்க்கையாகிக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் கோட்டையிலிருந்து வந்து செல்லும் இவரது பணியாட்கள் அவரது சீமை பற்றிய செயல்களை அப்பொழுதைக்கப்பொழுது தெரிவித்து வந்தனர். அவரது தனிமையையும் வருத்தத்தையும், ஒரளவு தணிக்கும் வாய்ப்பாக இந்தத் தொடர்புகள் இருந்து வந்தன. இவையும் சில சமயங்களில் அவருடைய ஆற்றொணாத தன்மையையும் அளவு கடந்த அவலத்தையும் மிகுதிப்படுத்தும் கருவியாகவும் மாறின. குறிப்பாக அவரது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியார், அவரது இக்கட்டான நிலைக்கு அணுவளவுகூட அனுதாபம் கொள்ளாமல் அவரது அரசுக்கட்டிலுக்கு முயற்சித்து வருவது, இராமநாதபுரம் அரசுக்குச் சொந்த


  1. Military consultations, Vol. 190, 25–2—1795, pp. 512-19
  2. Letter dated 20–2–1722 of Dutch Governor in Ceylon quoted by her. S. Kadirvelu