பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
புரட்சிப் பாதையில்

மறவர் சீமையில், மன்னர் இல்லாத, கும்பெனியாரது ஆட்சி நடைபெற்று வந்தது. சேதுபதி மன்னரை சிறையில் அடைத்து விட்டதால், நாட்டின் நலிவுகள் அனைத்தும் நீங்கிவிட்டது போன்ற நாடகம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வறட்சியின் பொழுது பஞ்சம் பிழைக்க தஞ்சை சென்ற மக்கள் அனைவரும் திரும்பி வந்து விட்டதாகவும் சம்பிரதிகளும், மணியக்காரர்களும் தங்களது கடமையை மிகுந்த விசுவாசத்துடன் நிறைவேற்றி வருவதாகவும் இவை எல்லாம் மகத்தான கும்பெனியாரது ஆட்சியில் ஏற்பட்ட அற்புதங்கள் என தளபதி மார்ட்டின்ஸ் பாராட்ட கலெக்டர் அவைகளைத் தமது அறிக்கையின் மூலமாக கவர்னருக்கு அனுப்பி வைத்தார். சீமை பேஷ்கார் முத்திருளப்ப பிள்ளை கும்பெனியாரது அடியார்க்கும் அடியாராக பணியாற்றி வந்தார். கும்பெனியாருக்கு வரவேண்டிய வரிபாக்கிகள் அனைத்தையும் மிகுந்த திறமையுடன் வசூலித்து வந்தார். மூன்று ஆண்டுகள் ஒடிவிட்டன.

கி.பி. 1797-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வாரம், மறவர் சீமையின் தெற்குப் பகுதியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரவிருக்கும் சூறாவளி ஒன்றின் முன் அறிவிப்பு போல குடிமக்கள் கிளர்ந்து எழுந்தனர். வரி செலுத்துவதற்கு மறுத்து வந்தனர்.[1] பாஞ்சைப் பகுதியின் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மு இந்தக் கிளர்ச்சியை ஊக்குவித்து வந்தார். இன்னும் சில பாளையக்காரர்களும் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவளித்து கும்பெனியாரது பொறுப்பில் இருந்து


  1. குரு. குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் (1928), பக். 214