பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

எஸ். எம். கமால்

பரம்பரை அறங்காவலரும் பழனி பாளையத்தின் தலைவருமான பாளையக்காரரை திண்டுக்கல் கோட்டைச் சிறையில் தள்ளியதுடன் அவரது பதவியையும் பறித்தனர்.[1] எர்ரமக்கோட்டை பாளையக்காரரை அவர்கள் பயமுறுத்தியதில் அவருக்கு பைத்தியமே பிடித்து விட்டது. அந்த பாளையமும் கும்பெனியாரது சொத்தாகியது. இதனைத் தொடர்ந்து மாம்பாறை பாளையத்துக்கும் குமாரவாடி பாளையத்துக்கும் இதே கதி ஏற்பட்டன.[2]

திண்டுக்கல் சீமையில் உள்ள எப்ரவாடு, சங்கம்பட்டி, மாத்துர் பாளையங்களும் கி.பி. 1796-ல் பறிக்கப்பட்டு கும்பெனியாரது உடமையாக்கப்பட்டன.[3] மதுரைச் சீமையில் உள்ள சாப்டுர் பாளையக்காரர் காமைய நாயக்கரும், செந்நெல்குடி பாளையக்காரர்களும், தங்கள் பாளையங்களை இழந்தனர்.[4] அடுத்த இரண்டு ஆண்டுகளில் நெல்லைச் சீமையில் உள்ள பாஞ்சை, காடல்குடி, குளத்துர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை ஆகிய பாளையங்களும், கும்பெனியாருக்குச் சொந்த மாக்கப்பட்டன.[5] தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இத்தகைய நிலையை கும்பெனியார் பின்பற்றி வந்ததை வரலாறு சொல்லுகின்றன. பாளையக்காரர்களது பாளையங்களைப் பிடுங்கி, தலைமுறை தலைமுறையாக அவர்கள் பேணிவந்த பதவிகளைப் பறித்து, அவர்களது கோட்டைகளையும் தரைமட்டமாக்கினர். சொந்தப் பாதுகாப்புக்கு அவர்கள் படை வீரர்களை வைத்துக் கொள்வதைக்கூட தடை செய்தனர்.[6]

அவர்களுக்கு ஆண்டுதோறும் குடிகள் செலுத்திவந்த தேச


  1. Ibid., p. 95
  2. Ibid., pp. 165-69
  3. Madurai District Records, Vol. 1236, 4-8-1796, pp. 45-48
  4. Board of Revenue proceedings, Vol. 292, 12-10-1801. p. 12844
  5. Ibid., Vol. 178, 1-6-1797, p. 3057
  6. Ibid., Vol. 299, 12-10-1801, pp. 12344-46