பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
113
 

காவல் காணிக்கைகளையும் பெற்றுக் கொள்ள இயலாது செய்து விட்டனர்.[1] குடிமக்கள் பாளையக்காரர்களுக்கும், நாட்டாண்மைக்காரர்களுக்கும் தாமாகவே உழைத்துக் கொடுக்கும் முறையையும் ஒழித்தனர்.

கி.பி. 1799-ல் கும்பெனியார் வெளியிட்ட உத்தரவில் பொதுமக்கள் ஆண்டுதோறும் பாளையக்காரர்களுக்கு அளித்து,வந்த தேசகாவல் தொகையை நேரடியாக கும்பெனியாரது அலுவலர்களிடம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.[2] இதனை நடைமுறைப்படுத்த தங்களது ஆயுத பலத்தைக் காண்பித்து பயமுறுத்தி வந்தார்.[3] அடுத்து தீர்வை வசூலிப்பதிலும் தங்களது கைவரிசையைக் காட்டி வந்தனர். மைசூர் ராஜ்யத்தில் திப்பு சுல்தானும் மறவர் சீமையில் முத்துராமலிங்க சேதுபதியும் முன்னர் குடிகளைக் கொடுமைப்படுத்தி வரி வசூலித்ததாக பறைசாற்றினர். ஆனால் அவர்கள் அந்தப் பகுதிகளை தமது உடைமையாக்கிய பிறகு மைசூர், சேலம் பகுதிகளில் திப்பு சுல்தான் விதித்த தீர்வையை விட 93 சதவீதம் கூடுதலாகவும் கோவையில் 118 சதவீதம் கூடுதலாகவும் தீர்வை விதித்து வசூலித்தனர். இத்தகைய இரக்கமற்ற முறையில் குடிகளை கசக்கிப் பிழிந்து கொடிய வரிவசூல் செய்த கலெக்டர் மன்றோவையும், கலெக்டர் மக்லாய்டையும் கும்பெனியாரது வருமானத்தைப் பெருக்கியதற்காக கும்பெனி கவர்னர் பாராட்டுகள் தெரிவித்தார்.[4] அவர்களது முன் மாதிரியைப் பின்பற்றி திண்டுக்கல் சீமை கலெக்டர் குர்திஷ், கம்பம், கூடலூர், பழனிப் பகுதிகளில் வரிகளை உயர்த்தி வசூலித்தார்.[5] கூடலூரில் மட்டும் விதிப்பு 96 சதவீதம் உயர்வு பெற்றது. நெல்லைச் சீமை கலெக்டர் பாளையக்காரர்களிடமிருந்து பறித்துச் சேர்த்த


  1. Revenue Despatches to England, Vol. VII, 22-1-1800, р. 21
  2. Board of Revenue proceedings Vol. 239, 18-11-1799
  3. Revenue Despatches to England; Vol. VII. 22-1-1800, pp. 18-19
  4. Ibid., pp. 78-79
  5. Board of Revenue General Report, Vol. Il D, 1-10-1797, part II, p. 13