பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

115

இத்தகைய காரணங்களினால் நெசவுத்தொழில் நசித்ததுடன் வெளியே விற்பனை செய்ய முடியாத தேக்க நிலையும் தோன்றி யது.[1] கும்பெனியாரைத் தவிர துணிகளைப் பெருமளவில் வாங்குவதற்கு தனியார்யாரும் அப்பொழுது தயாராக இல்லை. துணி வியாபாரிகள் தொடர்ந்து தொழில் நடத்தத் தயங்கினர்.[2]

மேலும் மன்னர்களது செங்கோலுக்குச் சான்றாக விளங்கி, மாதம் மும்மாரி பெய்த வானம் கி. பி. 1798-ல் பொய்த்தது. நெடுங்கடலும் நீர் சுருங்கிய கொடும் வறட்சி. பசுமை என்ற வண்ண ஆடையை பூமித்தாய் களைந்து எறிந்து விட்டது போன்று கண்ணைக் கெடுக்கும் காட்சி.[3]

பஞ்சம் பிழைப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக தஞ்சைத் தரணிக்கு விரைந்தனர். வான் பொய்ப்பினும் தான் பொய்க்காதே காவேரிப் படுகையிலும் தானியங்கள் மறைந்து போயின.[4] இத்தகைய கடுமையான பஞ்ச காலத்தில் பொதுமக்களைப் பற்றிய கவலை சிறிது கூட இல்லாமல் ஆளவந்தார்களான கும்பெனி நிர்வாகம் செயல்பட்டது. தங்களது படை அணிகளுக்கு தேவையான தானியங்களை மட்டும் வட மாநிலங்களிலிருந்து பெற்று இருப்பு வைத்துக்கொண்டனர்.[5] ஏற்கெனவே கும்பெனியாரும் இதர வெளிநாட்டாரும் குடிகளிடம் வரியாக அல்லது கிரையமாகப் பெற்று ஆங்காங்கு இருப்பு வைத்திருந்த தானியங்களை மிகவும் கூடுதலான விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இந்தக் காரணத்தினால் பக்கத்து பகுதியிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தனர். இதனையும் மீறி தலைச் சுமை


  1. Commercial Despatches to England, Vol. XIV, pp. 31–32
  2. Military Country Correspondence, Vol. 49, 13-10-1789, p. 354
  3. Revenue Consultations, Vol. 91 D, 14-12-1798, pp. 4191-96
  4. Military consultations, Vol. 256, 6-8-1799, p. 4613
  5. Political Despatches to England Vol. V. D, 13-3-1709. p. 323