118
எஸ். எம். கமால்
இந்தக் கிளர்ச்சிகளின் பாதிப்புபற்றி மதுரைச் சீமை வரலாற்றில் இவ்விதம் குறிப்பிடப் பட்டுள்ளது.[1]
"...மறவர் சீமையின் வருமானம் பெருத்த அளவு குறைந்தது. கி.பி. 1795-96-ம் ஆண்டில் ரூ. 1,31,207 ஆகவும், கி.பி. 1796-97-ம் ஆண்டில் ரூ.1,33,391 ஆகவும் இருந்த வருமானம், கி.பி. 1797-98-ல் ரூ. 94882/-ஆகவும் 1798-99-ல் ரூ. 65,127/ஆகவும் குறைந்துவிட்டது. சிறையில் உள்ள சேதுபதி மன்னரை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற இலட்சியத்தில், 23-4-1797 ல் துவக்கப்பட்டது போன்ற புதிய கிளர்ச்சியொன்று கும்பெனியாருக்கு எதிராக உருப்பெறுவது போல தோன்றியது. பக்கத்துச் சீமைகளிலும் பெரும் குழப்பம் நிலவின. பொதுவாக, தென்னகத்தில் அப்பொழுது ஏற்பட்டு இருந்த பாளையக்காரர்களது கிளர்ச்சியின் வாடை, இராமநாதபுரம் சீமையைப் பாதித்துள்ளது...'
மயிலப்பன் ஏற்கெனவே இராமனாதபுரம் அரசில் சேர்வைக்காரராக இருந்தவர். முதுகுளத்துரை அடுத்த சித்திரங் குடியில் பிறந்த விவசாயி. அன்று இந்த சிற்றுார் வீரத்தின் விளைநிலமாக விளங்கி வந்தது. கி.பி. 1772-ல் கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக இராமனாதபுரத்தைப் பிடித்த பொழுது நிகழ்ந்த போரிலும், கி.பி. 1781-ல் மாப்பிள்ளைத் தேவன் தலைமையில் ஆன புரட்சி அணியுடன் இளைஞர் முத்துராமலிங்கம் போரிட்ட_ பொழுதும், தங்கள் உயிரை காணிக்கையாகத் தந்து, மறவர் சீமையின் மாண்பை உயர்த்யவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த சித்திரங்குடி ஊரினர். இந்தக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியாக காடல்குடி பாளையக்காரரும் தளபதி மயிலப்பனது உதவிக்கு முன்னுறு வீரர்களை அனுப்பி வைத்ததுடன், சர்க்கார் சீமைக் கிராமங்களில் தமது ஆட்களுடன் அவர் கொள்கைகளை மேற்கொண்டார்.[2][3] 'பாஞ்சைப் பாளையக்காரரது ஆட்கள் கீழக்கரை வட்டத்தில்