பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

எஸ். எம். கமால்

காரர்கள் இன்னொரு துணிகரமான முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். இராமனாதபுரத்தில் கலெக்டர் தங்கி இருந்த வீட்டின் மீது தாக்குதல் தொடுத்தனர். தற்செயலாக அவர் உயிர் தப்பினார்.[1] இந்தக் கிளர்ச்சியின் விவரம் பற்றி கலெக்டர் லூவிங்டன் பாளையங்கோட்டையிலுள்ள தளபதி பானர் மேனுக்கு தகவல் அனுப்பியதுடன் இராணுவ உதவி அனுப்புமாறு கோரினார்.[2] மேலும் கிளர்ச்சி பற்றிய விவரங்களை விளக்கமான அறிக்கை ஒன்றில் சென்னையில் உள்ள கவர்னருக்கு தெரிவித்தார்.[3]

இராமனாதபுரத்தில் உள்ள தமது இல்லத்தின் மீதும் நெல்லைச் சீமையிலிருந்து இராமனாதபுரம் கோட்டைக்கு வந்து கொண்டிருந்த பொக்கிஷ வண்டிக்கு பாதுகாப்பாக வந்த படை வீரர்கள் மீதும், மறவர் சீமை கிளர்ச்சிக்காரர்கள் தொடுத்த தாக்குதல்கள் பற்றிய முழு விவரங்களையும் கலெக்டர் லூவிங்டன் கும்பெனி கவர்னருக்கு அறிக்கை செய்தார். அத்துடன் தமது உதவிக்குப் பெரும் படையினை சிவகெங்கைப் பிரதானிகள் அனுப்பி வைத்து இருப்பதையும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருந்தார்.[4] அத்துடன் மறவர் சிமைக் கிளர்ச்சியினால் குடிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், கிளர்ச்சியின் பொழுது கும்பெனி வீரர்களது ஆயுதங்களைப் பறிப்பதில் கிளர்ச்சிக்காரர்கள் காட்டியுள்ள அக்கறையில் இருந்து, இந்தக் கிளர்ச்சிகள். சிறிய கொள்ளைகளை நடத்துவதைவிட உயர்ந்த குறிக்கோள் ஒன்றை, கோடிட்டுக் காட்டுவதாகவும் தெளிவு படுத்தி இருந்தார்.

அந்தக் கிளர்ச்சி ஒரு முக்கியமான குறிக்கோளுடன், சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது என்றும் அதனை கும்பெனி தளபதி மார்ட்டின்


  1. Madurai collectorate, Vol. 1122, 25–5–1799
  2. Madurai collectorate Records, Vol. 1157, 24-4-1799, р. 69
  3. Ibid., 25-4-1799, p. 71
  4. Madurai Collectorate Records, Vol. 1122, 25-5-1799