பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

121

சின் விசாரணைகள் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சேதுபதி மன்னரிடம் சேர்வைக்க்காரராக பணியாற்றிய மயிலப்பன் என்பவர் அந்தக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வருவதாகவும் அவர் அண்மையில் திருச்சி கோட்டைக்குச்சென்று சேதுபதி மன்னரை சந்தித்து திரும்பிய பிறகு கிளர்ச்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

சேதுபதி மன்னரிடம் பணியாற்றிய பல அலுவலர்கள் தொடர்ந்து திருச்சியில் உள்ள சேதுபதி மன்னருடன் தொடர்பு கொண்டு இருப்பதால் மயிலப்பனது முயற்சிக்கு சேதுபதியின் ஆதரவு இருந்து வருவது நம்பத்தக்கதாக உள்ளது. அதன் காரணமாக மறவர் சீமையில் உள்ள நாட்டுத் தலைவர்கள் பலருக்கும் மயிலப்பன் ஒலைகள் அனுப்பி, சேதுபதி மன்னருக்கு ஏற்பட்டுள்ள சிறுமையைக் களையவும். கும்பெனியாரிடம் இருந்து மறவர் சீமையை விடுவிக்கவும் குடிகள் அனைவரும் கிளர்ந்து எழுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆகையால் இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த தவறினால் விபரீதமான விளைவுகள் எதிர்கொள்ள இருக்கின்றன என்று அச்சுறுத்தி இருந்தார். சேதுபதி மன்னர் திருச்சிக் கோட்டையில் இருந்து தப்பிச் செல்ல இயலாத முறையில் பாதுகாப்பு, நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும், இயலுமானால் சேதுபதி மன்னரை நெடுந்தொலைவில் உள்ள நெல்லூர் இராணுவ தளத்திற்கு அனுப்பி வைத்து பாதுகாவலில் வைக்குமாறும் யோசனை தெரிவித்து இருந்தார்.[1]

இதற்கிடையில் மக்களின் கிளர்ச்சி பங்குனி மாத பகற்பொழுதுபோன்று கடுமையாகிக் கொண்டு வந்தது. கும்பெனியாரது கூலிப்பட்டாளத்திடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றுவது, அவர்களது இருப்புக் கிடங்குகளில் உள்ள துணிகள், தானியங்களை சூறையாடி பேரிழப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மட்டும் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அபிராமத்திலும், கமுதியிலும் தவிர்க்க


  1. Military Consultations, Vol. 105 A, 4-9-1800, р. 2611