பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

எஸ். எம். கமால்

பிள்ளை, ஒரு கருப்புக்குடையை பிடித்துக் கொண்டு கிளர்ச்சிக் காரர்களுக்கு அப்பொழுதைக்கப்பொழுது கட்டளைகளை பிறப்பித்தும், போராட ஊக்குவித்தும் வந்தார். போரின் பொழுது முதுகுளத்தூர் அமில்தார், ஆப்பனுார் சேர்வைக்காரர்கள் கும்பெனிப்படைக்கு அளித்து வந்த உதவிகள் காரணமாக கிளர்ச்சிக்காரர்கள் பலத்த காயங்களுடன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் பின்வாங்கினர்.[1] சேதுபதி மன்னருக்கு பரம வைரியான அபிராமம் வீசுகொண்டத் தேவர் என்ற துரோகியினாலும் கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன.[2]

அன்றைய கிளர்ச்சியின் முக்கிய தலமாக கமுதிக்கோட்டை விளங்கியது. முழுவதும் கல்லினாலாகிய இந்த வலிமையான அரணை பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு அமைத்தவர் விஜயரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1711-21). அதனுடைய முக்கியத்துவம் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கிளர்ச்சியின் பொழுதுதான் இருதரப்பினராலும் உணரப்பட்டது. ஒன்பது கொத்தளங்களுடன் அமைந்து இருந்த இந்தக் கோட்டையிலிருந்து வெடிகுண்டு போய்விழும் தொலைவு வரை நெருக்கமான காடு சூழ்ந்து இருந்தது.[3] கோட்டை இருப்பதையே மறைத்துக் கொண்டு இருந்தது. இதனை தங்களுக்கு மிகவும் சாதகமான பாதுகாப்பு இடமாக கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களான சிங்கன்செட்டி, பட்டுர், மயிலப்பன் ஆகியோர்களது நடமாட்டமும் அங்கு மிகுந்து இருந்தது. கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இங்கு பயங்கர மோதல்கள் பல ஏற்பட்டன. மறவர்களிடையே விர சாகலங்கள் மிகுந்து இருந்த பொழுதும் கும்பெனியாரது சக்தி வாய்ந்த வெடிமருந்துத் திறனுடன் இயங்கிய பீரங்கிகளுக்கு முன்னர், கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பயனற்றுப் போயின. அந்த வீர மரணப் போரில் தங்களது தோழர்கள்


  1. Revenue consultations, Vol. 95 A, 15-5–1799, p. 1007.
  2. Revenue consultations. Vol. 95 A, 15-5-1799 pp. 1007-21.
  3. Military country correspondence, Vol. 2 1 (1772), pp. 159-65