பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

எஸ். எம். கமால்

நொடித்துவிட்ட மக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு இத்தகையதொரு மயான அமைதி நிலவியது, வியப்பான சம்பவமாக தோன்றியது. மற்றுமொரு ஆயுதப் புரட்சிக்கு தயாராக மக்கள் எடுத்துக் கொண்ட அவகாசமாக இருக்குமோ என கும்பெனியார் அஞ்சினர். அதனால் சீமை முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் பரங்கிகள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்தக் கிளர்ச்சியின் தொடர்ச்சி நெல்லை சீமையிலும், மதுரை, திண்டுக்கல் சீமைகளில் மட்டுமே எதிரொலித்தன. தொடர்ந்து நீடித்தன.