பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

எஸ். எம். கமால்

படுத்தும் சீற்றத்தையும் கண்டு வியந்த சின்னமருதுவும் பாஞ்சைப் பாளையக்காரரும், அவருக்கு பல அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர்.[1] மேலமாந்தையிலிருந்து மறவமங்கலம் வரையிலான பரந்த பகுதியில் அவரது குதிரையின் கால் குளம்புகள் படாத இடம் இல்லை, என்னும் அளவிற்கு சுழன்று சுழன்று போரிட்டு வந்தார். கும்பெனியாரது தானியக் கிடங்குகள், அவர்கள் கைக்கூலிகளது பொருட்கள், கால்நடைகள் அனைத்தையும் அவரது கொள்ளைப் பொருட்களாகின. மைசூர் மன்னர் திப்புசுல்தானுடன் தொடுத்த போர் அப்பொழுது முடிந்து விட்டதால் தங்களது மூல பலம் முழுவதையும் மறவர் சீமையின் மீது முடுக்கி விட்டனர் கும்பெனியார். பரங்கி அணிகள் பல இராமனாதபுரம் சீமையையும் சிவகங்கை சிமையையும் துளைத்து தொல்லைகள் கொடுத்து சுடுகாடாக்கின.

கி.பி. 1800-ம் ஆண்டு ஜனவரி மாதம் சேதுபதி மன்னரது வங்க நாட்டு வணிகப் பிரதிநிதி தருமப்பிள்ளை கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்தார். திருச்சிக் கோட்டையில் அரசரைச் சந்தித்து உரையாடி விட்டு வெளியே வந்தார். அவரை எதிர் பார்த்துக் காத்திருந்த கும்பெனி வீரர்கள் அவரைக் கைது செய்து இராமனாதபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.[2] கலெக்டர் லூவிங்டனது கச்சேரியில் கொண்டு போய் நிறுத்தினர். தருமப்பிள்ளை கல்கத்தாவில் தங்கி இருந்து சேதுபதி மன்னருக்காக சங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்ததை கும்பெனியார் அறிவர். ஆதலால் அவரை விசாரித்து சேதுபதி மன்னரது சொத்துக்கள், வங்கத்தில் முடக்கியுள்ள முதலீடுகள் ஆகியவைகளை அறிந்து கைப்பற்றுவது கும்பெனியாரது திட்டம்! கலெக்டர் அவரை நீண்ட நேரம் விசாரித்தார். அவரிடத்தி லிருந்த கணக்குகளையும் பார்வையிட்டார். 1794-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் சங்குகள் அடங்கிய சாக்குப் பொதிகளுடன் தேவிப்பட்டினம் துறை


  1. Madurai Collectorate Records, Vol. 1146 (1803. AD), p. 45.
  2. Military Consultations, Vol. 1054, 4-9-1800, р. 2 б13.