பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

139

மாற்றம் செய்யப்பட்டார்.[1] கோட்டை தளபதி பிராக்கிலி எப்பொழுதாவது அவரைச் சென்று சந்திப்பார். அவரிடத்தில் பாணர் எதைப் பற்றியும் உரையாடுவது இல்லை. வெள்ளையரைக் கண்டாலே வெறுப்பும் வேதனையும் அடையும் நிலையில் உள்ள அவரிடம் உரையாடுவதற்கு என்ன இருக்கிறது; ஓரிரண்டு சொந்த பணியாட்கள் மட்டும் மன்னருடன் சென்னைக் கோட்டைக்குள் தங்கி இருந்தனர். முன்னைப் போல இராமநாதபுரத்திலிருந்து அடிக்கடி செய்திகள் பெறுவதற்கு இயலாத நிலை - என்றாலும் இராமனாதபுரத்திலிருந்து அவரைச் சந்திப்பதற்காக வந்த ஊழியர்களும் உறவினர்களும் அவரை விட்டு பிரிந்து செல்ல மனம் இல்லாமல் சென்னையிலேயே தங்கி விட்டனர்.[2] இராமன் இருக்கும் இடம் தானே அயோத்தி கும்பெனியாரது ஆவணம் ஒன்றில் கண்டுள்ளபடி அவர்களது மொத்த எண்ணிக்கை 99 ஆகும்.[3] மன்னருக்கு தனிமையும் எமாற்றமும் விரக்தியும் தோன்றாதவாறு அவர்கள் கவனித்து வந்தனர்.

அங்கும் ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.

மொத்தத்தில் பதினான்கு ஆண்டுகள் கோட்டைக்குள் சிறைவாசம், கோட்டைச் சுவற்றிற்குள் இரும்புக்கதவுகளின் வல்லைக்குள் எழுதரிய பெருங்கொடுமைச் சிறைவாழ்க்கை. நொடிப்பொழுதில் அதனை எண்ணிப் பார்ப்பது எளிதானது அல்ல. நைந்து நலிந்த உணர்ச்சிகளை மாய்த்து, உள்ளத்தை முடுக்கி விடும் ஒவ்வொரு விநாடியும் அங்கு எத்தனையோ யுகங்களுக்கும் கூடுதலான காலவரையை உடையனவாக இராமனாதபுரம் மன்னர் கருதினார். இத்தனை ஆண்டுகளையும் சிறைக்குள் கழித்ததே இணையற்ற சாதனையாகும்!

1809-ம் வருடம் ஜனவரி மாதம்.

சிறை வாழ்க்கையினால் செல்லரித்துப் போன மன்னரது உடலில் நலிவு ஏற்பட்டது, நீடித்தது. உணவு எதையும் உட்


  1. Revenue Consultations, Vol. 167 (1809), pp. 315-17, p. 222
  2. Madurai collectorate Records, Vol. p. 1163 (1815) pp. 206-207.
  3. Ibid., p. 320.