பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

எஸ். எம். கமால்

மறைந்து விட்டார். தம்முடைய நாற்பத்து எட்டு ஆண்டுகால வாழ்க்கையில் இருபத்து நான்கு ஆண்டுகள் கும்பெனியாரது வெஞ்சிறையில் கழித்த தியாகி மறைந்து விட்டார். அவரது கம்பீரமான தோற்றத்தையும் கடுமையான நடவடிக்கைகளையும் கண்டு அஞ்சிய கும்பெனியாரது கட்டுப்பாட்டினின்றும் மறைந்து விட்டார். முற்றுப்பெறாத தமது போராட்டத்தில், வாழ்வின் முடிவு வந்து விட்டதே என்ற வேதனையில் மன்னர் மறைந்து விட்டார். ஆனால் மறவர் சீமை வரலாற்றில் முத்துராமலிங்க சேதுபதி மறைந்து விடவில்லை. செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்களை, புராணங்களிலும் இலக்கியங்களிலும் சிரஞ்சீவிகளாக என்றென்றும் வாழ்கின்றன என வழுத்துகின்றன அல்லவா? அவர்களைப் போன்று. சேதுபதி மன்னரும் விடுதலைப் போர் இலக்கியத்தில் அந்நிய எதிர்ப்பை அடியோடு சாடிய இதிகாசத்தில், என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இந்தத் துறையில் இவருக்கு, முன்னாள் இருந்தவர்களை பலவகையிலும் விஞ்சியவராக பின்னால் வந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரியத்தை உருவாக்கிய முன்னோடியாக இவர் விளங்குகிறார் என்பதை வரலாறு விளம்புகிறது.

* * *

கி.பி. 1736-ல் நாயக்க அரசு முடிந்து, ஆற்காட்டு நவாப்பு ஆதிக்கம் தமிழகத்தில் புகுத்தப்பட்ட பொழுது, தன்னmசாக விளங்கியவர்கள் தஞ்சாவூர் அரசரும், இராமனாதபுரம் சேதுபதி மன்னரும் ஆவர். நெல்லை, மதுரை, திருச்சிப் பகுதிகளில் முந்தைய நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்டிருந்த பாளையக்காரர்களில் சிலர் புதிய எஜமானரான ஆற்காட்டு நவாப்பை எதிர்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தலைமை தாங்கியவர் நெற்பட்டும் செவ்வலைச் சேர்ந்த பூலித்தேவர். ஆற்காட்டு நவாப்பை அவர் எதிர்த்தாரே ஒழிய அவரது தமையனாரது மதுரை ஆளுநருமான மகபூஸ்கானை அவர் எதிர்க்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரையும் தமது அணியில் சேர்த்துக்கொண்டு ஆற்காட்டு நவாப்பை பூலித்தேவர் எதிர்த்துப் போரிட்டார்.[1] அவரது இயக்கத்திற்கு நெல்லைச்


  1. Military Country Correspondence, Vol. VI, 9-1-1758, p. 6