பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
143
 

சீமை பாளையக்காரர்கள் அனைவரும் முழுமையான ஆதரவு அளிக்கவில்லை.[1] மறக்குடி மக்களது மூத்தக் குடிமகனான செதுபதி மன்னரது உதவியையும் அவர் பெறவில்லை. அத்துடன், நவாப்பின் படைகள், பரங்கியருடன் இணைத்து தலைமை தாங்கிய கம்மந்தான் கான்சாகிப்பின் பண்பட்ட போர்த்திறனுக்கு முன்னால் பூலித்தேவரது படை சிதறி ஓடியது[2] தோல்வியைத் தாங்க முடியாத பூலித்தேவர் நெல்லைச்- சீமையிலிருந்து தப்பி வந்து மறவர் சீமையில் தஞ்சம் புகுந்தவராக அங்கேயே கி.பி. 1761-ல் மறைந்து போனார்.[3] அவரது காயமும் பேராற்றலும் காட்டில் ஒளிர்ந்த நிலவாக பயனற்றுப் போய்விட்டன.

அடுத்து தமிழக வரலாற்றில் ஆற்காட்டு நவாப்பையும் கும்பெனியாரையும் எதிர்த்து தியாகியானவர் கம்மந்தான் கான் சாகிபு. இவை பாளையக்காரரோ அல்லது குறுநிலக்கிழாரோ அல்ல. மறவர் சீமையைச் சேர்ந்த பனையூர் என்ற சிற்றுாரில் பிறந்த சாதாரண குடிமகன். கும்பெனியாரின் சுதேசி வீரர் களது அணிக்கு தளபதியாக இருந்தவர். காலமெல்லாம் கும்பெனியாருக்கு தனது உதிரவேர்வையை உழைப்புடன் வடித்து வழங்கி உன்னத பதவிக்கு வந்தவர். தமது வீரத்தால், நிர்வாகத் திறமையால், நவாப்பின் சொத்தாக தக்கவைத்து நலம் பல விளைய காரணமாக இருந்த மதுரைச் சீமையை, தம்முடைய கோரிக்கைக்கு புறம்பாக, மாற்றானுக்கு நவாப் குத்தகை வழங்கியதால் அவர்மீது கொண்ட வெஞ்சினத்தால் வீறுகொண்டு எழுந்தவர். நவாப்பின் பின்னே வலிமைமிக்க கும்பெனியாரின் ஆயுத பலம் இருப்பது தெரிந்தும் மக்கள் பலத்துடன் மாற்றானை போரில் சந்தித்தார். அதுவரை அவரிடம் தோழமையுடன் இருந்து வந்த திருவாங்கூர் அரசரும், இராமனாதபுரம், சிவகங்கை மறவர்களும், அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. அவர்களை உதவவிடாமல் கும்பெனியாரும்


  1. Rajayyan, K., Dr., Rise and Fall of Polegars of Tamilnadu (1974), pp. 48–50.
  2. Military Country Correspondence, Vol. IX, 25-5-1761, р. 58.
  3. Kathirvelu, S., Dr., History of Marawa (1972), p. 140.