பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

145

டில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு கிளர்ச்சியில், பரங்கியரை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவராக ஒளிவீசி உயர்ந்து உள்ளார்.

அவரைத் தொடர்ந்து, பிற்காலத்தில் தமிழகத்தில் பாஞ்சைப்பதி வீரபாண்டிய கட்டபொம்மு, சித்திரங்குடி மயிலப்பன். சிவகங்கை மருது சேர்வைக்காரர்கள், மீனங்குடி முத்து கருப்பத்தேவர், தேவதானப்பட்டி பூசாரிநாயக்கர், விருபாட்சி கோபால நாயக்கர், பழனி முத்து சேர்வைக்காரர், காடல்குடி நாயக்கர், குளத்துார் நாகராச மணியக்காரர் ஆகிய மக்கள் தலைவர்கள் வெள்ளையருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து அவர்களுடன் இறுதிப்போர் நடத்துவதற்கு முன்னோடியாக இந்த சேதுபதி மன்னரது விடுதலைப் போக்கும் தியாக வாழ் அம் வழிகாட்டியாக ஒளியூட்டுவதை வரலாறு காட்டுகிறது.

இன்னும் தெளிவாக குறிப்பிடுவது என்றால், இந்திய துணைக்கண்டத்தில், இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையருக்கு எதிரான விடுதலைக் கிளர்ச்சி, தெற்கிலிருந்து துவங்கி, நாடு தழுவிய தேசியப் புரட்சியாக பரிணமித்து எழுவதற்கு முன்னர், வெள்ளையரது ஆதிக்க கொள்கையை அரும்பு பருவத்திலே அழித்து ஒழிக்க தன்னரசு முழக்க மிட்டவர் இந்த சேதுபதி மன்னர். இவரது இலட்சியச் சிந்தனையை, பிற்காலத்தில் எழுந்த சின்னஞ்சிறு கிளர்ச்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் மகத்தான மக்கள் இயக்கங்களும், எதிரொலித்தன . மாற்றானை நாட்டை விட்டு விரட்டச் செய்த மகோன்னத புரட்சியாக மலர்ந்தது. ஆனால் சேது மன்னரது பரங்கியர் ஆதிக்க எதிர்ப்பு போக்கிற்கு ஏற்ற பரிசாக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்துக் கொன்றனர். தங்களை எதிர்க்கும் நாட்டுப்பற்று மிக்கவர்களை பயமுறுத்தி நடுங்க வைப்பதற்காக கும்பெனியார் கையாண்ட உத்தி இது.

அவர்களுடைய ஆவணங்கள் இந்த வரலாற்று உண்மையை மூடிமறைப்பதற்காக சேதுபதி மன்னர் கொடுமையாக ஆட்சி செய்தார். குடிகளிடம், குறிப்பாக நெசவாளர்களிடம் கூடுதலான வரிகளை வசூலித்தார் என்ற புனைந்துரைகளை