பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

எஸ். எம். கமால்

வரைந்துள்ளன. அவை அனைத்தும் உண்மை என்றே ஏற்றுக் கொண்டாலும் கூட, அவரை 8-2-1795 Political Despatches to England, Vol. II. 4-3-1795, pp. 338-40. அன்று மறவர் சீமையின் ஆட்சிக் கட்டிலிலிருந்து நீக்கிய பிறகும்கூட, அவm் இறக்கும்வரை தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஏன் சிறைக்குள் அடைத்து வைத்திருக்க வேண்டும்?

சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கு எதிராக சேதுபதி போர் தொடுத்தார் என்பது மற்றொரு புனைந்துரை. ஆங்கிலேயரது செல்லப்பிள்ளைகளாக ஆரம்பகாலத்தில் நடித்துவந்த அதே மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் தங்களது எதிரிகள் என பகிரங்கமாக அறிவித்ததுடன் அவர்களது கிளர்ச்சியையும் தங்களது மிருக பலத்தாலும், துரோக உபாயங்களாலும் தோல்வியுறச் செய்து, அவர்களையும் திருப்பத்துரர் கோட்டையில் 2 1-10-1801-ல் தூக்கில் தொங்கவிட்டனர்.[1] அதற்குப் பிறகும் கூட சேதுபதி மன்னரை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்?

அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து மற்றொரு தன்னரசாைன தஞ்சாவூரின் அரசர் அமீர்சிங்கை ஆளத் தகுதியற்றவர் என நீக்கிவிட்டு கும்பெனியார் தங்களுக்குச் சாதகமாக இருந்த இளவல் சரபோஜிக்கு மன்னர் பட்டம் சூட்டிய பின்னர் அவருக்கு ஒய்வு வழங்கி தஞ்சை தரணியையும் தங்களது சொத்தாக சேர்த்துக் கொண்டனர்.[2] அதனைப் போன்று இராமநாதபுரம் மன்னரை பதவிநீக்கம் செய்த பின்னர் அவரது வாரிசுக்கு ஆட்சியுரிமை அளிக்கப்போவதாக அறிவித்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெருந்தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்ட பிறகு மங்களேஸ்வரி நாச்சியாரை மறவர்


  1. Military Despatches to England, Vol. 33, 20-10-1802, р. 668.
  2. Revenue Despatches to England, Vol. VII. 9-5-1803, pp. 528-40.